செப்டம்பர் 25ஆம் தேதி முதல் மீண்டும் பொதுமுடக்கமா:? மத்திய அரசின் விளக்கம்!

0
208

செப்டம்பர் 25ஆம் தேதி முதல் மீண்டும் பொதுமுடக்கமா:? மத்திய அரசின் விளக்கம்!

 

இந்தியா முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் பல்வேறு கட்டங்களாக பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது.எனினும் மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு ஒவ்வொரு கட்டங்களிலும் பல்வேறு தளர்வுகளை மத்திய மாநில அரசுகள் அளித்து வந்தன. இந்நிலையில்,செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் நான்காம் கட்ட ஊரடங்கு மத்திய அரசால் பல்வேறு தளர்வுகளுடன் அமல்படுத்தப்பட்டது.

செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் போக்குவரத்து இயக்கம்,வழிபாட்டு தளங்கள் திறப்பு,தொழில் நிறுவனங்கள் 100% இயக்கம்,போன்ற பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்ட நிலையில்,மத்திய அரசுக்கு தேசிய பேரிடர் மேலாண்மை அமைப்பு மீண்டும் பொது முடக்கத்தை அமல்படுத்துமாறு பரிந்துரை செய்துள்ளதாக கூறி ஒரு அறிக்கை ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.

இந்த அறிக்கையானது பொதுமக்களிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்த அறிக்கை போலியானது என்று மத்திய அரசு நேற்று விளக்கம் அளித்துள்ளது. மேலும் இனி பொது முடக்கம் அமல் படுத்தப்படமாட்டாது என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Previous articleஒரே ஒரு போட்டோவில் மூலம் பட வாய்ப்புகளை குவித்த நடிகையின் மகள்! மம்மியை டம்மி ஆக்கி மகளை புகழ்ந்து தள்ளும் நெட்டிசன்கள்!
Next articleகலிபோர்னியாவில் நிகழ்ந்த வினோத சம்பவம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here