வெற்றியுடன் விடைபெறுவாரா ட்ரெண்ட் போல்ட்? நியூசிலாந்து அணி கடைசி போட்டியில் வெற்றி பெறுமா? 

0
119
Trent Boult
Trent Boult
வெற்றியுடன் விடைபெறுவாரா ட்ரெண்ட் போல்ட்? நியூசிலாந்து அணி கடைசி போட்டியில் வெற்றி பெறுமா?
நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் லீக் சுற்றுடன் வெளியேறிய நியூசிலாந்து அணி தன்னுடைய கடைசி லீக் பேட்டியில் விளையாடுகின்றது. அதே போல நியூசிலாந்து அணியின் சீனியர் வீரர் ட்ரெண்ட் போல்ட் அவர்கள் கடைசி டி20 உலகக் கோப்பை தொடரில் விளையாடுவதால் அவரை வெற்றியுடன் அனுப்பி வைக்குமா என்று நியூசிலாந்து ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
நடப்பு உலகக் கோப்பை தொடரில் 20 அணிகள் பங்கேற்று விளையாடியது. அதில் லீக் சுற்றில் முன்னாள் சேம்பியன் அணிகளான பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளும் முன்னணி அணிகளில் ஒன்றான நியுசிலாந்து அணியும் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெறமால் லீக் சுற்றுடன் வெளியேறி இருக்கின்றது.
இதில் நியூசிலாந்து அணி தன்னுடைய முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியிடம் பெற்ற தோல்வி மிகப் பெரிய பின்னடைவை அந்த அணிக்கு தந்துள்ளது. இதனால் தொடர்ந்து இரண்டாவது போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியிடமும் தோல்வியை தழுவியது. இதையடுத்து இரண்டு போட்டிகளை தோற்ற நிலையில் ஏற்கனவே ஆப்கானிஸ்தான் மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணி மூன்று போட்டிகளில் வெற்றி பெற்றதால் நியூசிலாந்து அணி சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெறவில்லை.
இந்நிலையில் நியூசிலாந்து அணியில் இருக்கும் சீனியர் வீரரான ட்ரெண்ட் போல்ட் தன்னுடைய கடைசி உலகக் கோப்பை தொடரில் விளையாடுவதாகவும் இனி விளையாடப்போவது இல்லை எனவும் ஏற்கனவே அறிவித்துள்ளார். இந்நிலையில் நியூசிலாந்து அணி தன்னுடைய கடைசி லீக் போட்டியில் இன்று(ஜூன்17) பப்புவா நியூ கினியா அணியை எதிர் கொள்கின்றது.
இந்த போட்டி இன்று(ஜூன்17) இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. நியூசிலாந்து மற்றும் பப்புவா நியூ கினியா அணிகள் மோதும் இந்த போட்டி வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான பிரையன் லாரா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ளது.
நியூசிலாந்து அணி விளையாடிய மூன்று போட்டிகளில் ஒரு வெற்றி மற்றும் இரண்டு தோல்வி அடைந்துள்ளது. பப்புவா நியூ கினியா அணி விளையாடிய மூன்று போட்டிகளிலும் தோல்வியை சந்தித்துள்ளது. இதனால் ஒரு வெற்றியாவது பெற்று டி20 தொடரில் இருந்து வெளியேறும் முனைப்பில் பப்புவா நியூ கினியா அணி இருக்கின்றது.
மேலும் நியூசிலாந்து அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ட்ரெண்ட் விளையாடும் கடைசி டி20 உலகக் கோப்பை போட்டி என்பதால் நியூசிலாந்து அணி வெற்றியுடன் அவரை வழி அனுப்பி வைக்க வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் களமிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.