இந்தியாவின் கோரிக்கையை நாங்கள் ஏற்கிறோம்! பிரதமருடனான சந்திப்பில் போரிஸ் ஜான்சன் ஒப்புதல்!

Photo of author

By Sakthi

இங்கிலாந்து சமீபகாலமாக இந்தியாவுடன் நட்புறவு வைத்துக்கொள்வதற்கு ஆர்வமாக இருந்து வருகிறது. மேலும் அந்த நாடு இந்தியாவுடன் வர்த்தக ரீதியான தொடர்பை வைத்துக் கொள்வதற்கும் ஆர்வம் காட்டி வருகிறது. இந்த நிலையில், சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி இங்கிலாந்து சென்று வந்தார்.

அப்போது தன்னுடைய இங்கிலாந்து பயணத்தை முடித்துக்கொண்டு திரும்பும் தருவாயில் நிச்சயமாக தாங்கள் இந்தியா வர வேண்டும் என்று அழைப்பு விடுத்துவிட்டு வந்தார் பிரதமர் நரேந்திர மோடி.

அந்த அழைப்பின் பேரில் சில நாட்களுக்கு முன்னர் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்தியா வந்தடைந்தார். இந்த நிலையில் இந்தியாவில் தொழில்நுட்பம் பாதுகாப்பு உள்ளிட்டவற்றில் கூட்டாக ஒன்றிணைந்து இரு நாடுகளும் செயல்படவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதோடு இந்தியாவில் முதலீடு செய்யவும், போரிஸ் ஜான்சன் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தாகியிருக்கிறது. இதனை தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற போரிஸ் ஜான்சன் நேற்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து உரையாற்றினார். அதன்பிறகு இரு நாட்டுத் தலைவர்களும் கூட்டாக பத்திரிகையாளர்களை சந்தித்து பேசியிருக்கிறார்கள்.

பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது போரிஸ் ஜான்சனிடம் இந்திய வங்கிகளில் கடன் மோசடி செய்துவிட்டு லண்டனில் தஞ்சமடைந்துள்ள விஜய் மல்லையா மற்றும் நீரவ் மோடி உள்ளிட்டோர் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதில் தெரிவித்த போரிஸ் ஜான்சன் நீங்கள் குறிப்பிட்ட இரண்டு தனி நபர்களை பொறுத்தவரையில் நாடு கடத்தல் வழக்கு இதில் பல்வேறு சட்ட ரீதியான நுட்ப விஷயங்கள் இருப்பதால் சற்று கடினம் ஏற்பட்டிருக்கிறது என தெரிவித்திருக்கிறார்.

ஆனாலும் இங்கிலாந்து அரசு அவர்களை நாடு கடத்த உத்தரவிட்டிருக்கிறது என்பதை நான் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்த அவர், எங்களுடைய தரப்பிலிருந்து நாங்கள் தெரிவிப்பது என்னவென்றால், வழக்கு விசாரணையை எதிர் கொள்வதற்காக அவர்களை இந்தியாவிடம் ஒப்படைக்கவே நாங்கள் விரும்புகிறோம் என்று தெரிவித்திருக்கிறார் போரிஸ் ஜான்சன்.

இந்தியாவிலிருந்து வரும் கோடீஸ்வரர்களையும் திறமைமிக்க நபர்களையும், நாங்கள் வரவேற்கிறோம். ஆனால் இந்தியாவிலுள்ள சட்டத்திலிருந்து தப்பிக்க எங்கள் சட்ட அமைப்பை பயன்படுத்த விரும்புபவர்களை நாங்கள் வரவேற்பதில்லை என்று தெரிவித்தார்.

இந்திய நாட்டில் வங்கிகளில் கோடிக்கணக்கில் கடன் வாங்கிவிட்டு விஜய் மல்லையா மற்றும் நீரவ் மோடி உள்ளிட்டோர் வெளிநாட்டுக்கு தப்பி ஓடிவிட்டனர்.

அவர்களுடைய சொத்துக்களை முடக்கும் கடன்தொகை முழுமையடையவில்லை என்று சொல்லப்படுகிறது. இருவரும் பிரிட்டனில் வசித்து வருவதால் அவர்களை இந்தியா கொண்டு வருவதற்கு சில வருடங்களாகவே இந்தியா போராடி வருகிறது. இந்த சூழ்நிலையில், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.