6 அடி பாம்பை சரக்குக்கு சைடிஸாக சமைத்து சாப்பிட்ட மது பிரியர்கள்:! வைரலாகும் வீடியோவால் பரபரப்பு!

Photo of author

By Pavithra

6 அடி பாம்பை சரக்குக்கு சைடிஸாக சமைத்து சாப்பிட்ட மது பிரியர்கள்:! வைரலாகும் வீடியோவால் பரபரப்பு!

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள தங்கமாபுரிபட்டணம்,
வடபத்ரகாளியம்மன் கோயிலின் பின்பகுதியில் மூன்று இளைஞர்கள்,ஆறடி நீளமுள்ள பாம்பை தோல் உரித்து குடல் எடுத்துவிட்டு துண்டு துண்டாக வெட்டி,மசாலா தடவி எண்ணெயில் போட்டு, எடுத்து வாழையிலையில் வைத்து மது குடிக்கும் பொழுது சைடிஸாக,பாம்பு கறியும்,சாப்பிடுவதுவரை வீடியோ எடுத்து,சமூக வலைதளங்களில் மது பிரியர்கள் பதிவிட்டுள்ளனர்.
இந்த வீடியோவானது சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து,இந்த வீடியோவானது காவல்துறை மற்றும் வனத்துறையினர் கண்ணில்படவே,
இவர்களைப் பற்றி விசாரித்த பொழுது அந்த வீடியோவில் உள்ளவர்கள்,முகம்மது உசேன்,ஜெயா மற்றும் சுரேஷ் என்பது தெரியவந்தது.

இந்த மூன்று பேரையும் வனத் துறையினர் பிடித்து விசாரணை நடத்தியபோது,விசாரணையில் நேற்று முன்தினம் அங்கு வசிக்கும் சிவகுமார் என்பவரின் வீட்டினுள் சாரைப்பாம்பு வந்துள்ளது.அந்த சாரைப்பாம்பை சுரேஷ் உள்ளிட்ட 3 பேரும் சேர்ந்து பிடித்துள்ளனர் அதனைக் கொன்று வீசி செல்ல மனமின்றி,இவர்கள் மதுவுக்கு சைட்டிஸ் ஆக சமைத்து சாப்பிட்டது தெரியவந்தது.
இவர்கள் செய்த குற்றத்தை இவர்களை ஒப்புக் கொண்டதனால் இந்த மூன்று பேர் மீதும் வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைதுசெய்யப்பட்டுள்ளனர்.