சகலமும் நாங்கள்தான்! கெத்து காட்டும் பாஜக!

Photo of author

By Sakthi

பாரதிய ஜனதாவின் தேசிய தலைமை என்ன சொல்கிறதோ அதைத்தான் தமிழக பாரதிய ஜனதா கட்சி செயல்படுத்தி வருகின்றது என்பதை அதிமுகவினர் உணர்ந்து கொள்ள வேண்டும் என்று கேரள மாநிலத்தின் பாஜகவின் பொறுப்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணன் தெரிவித்திருக்கின்றார்.

திருப்பூரில் செய்தியாளர்களிடம் உரையாற்றிய அவர், பாரதிய ஜனதா கட்சி என்பது அந்த கட்சியின் தலைவர்களும், அதனுடைய தொண்டர்களும், ஒரே சமமாக நடத்தப்படுகின்ற ஒரு இயக்கம். தமிழ்நாட்டில் தாமரை மலருமா என்று கேள்வியை கேட்டதற்கு, மத்தியிலே இப்பொழுது தாமரை அல்லாமல் ஆட்சி மலரும் என்ற நிலை உருவாகியிருக்கின்றது. பாரதிய ஜனதா, மற்றும் அதிமுக போன்ற கட்சிகள் அங்கம் வகிக்கக்கூடிய தேசிய ஜனநாயக கூட்டணி சிறப்பாக செயல்பட்டு வருகின்றது. இது எதிர்வரும் நாட்களிலும் தொடரும் மக்களின் நலனை கருத்தில் கொண்டு செயல்பட்டு வரும் இந்த கூட்டணி ஆனது நிச்சயமாக வெற்றி பெறும் என்று தெரிவித்தார்.

மாநிலத்திலே ஆட்சியில் இருந்த போதெல்லாம் செய்யாதவற்றை இப்பொழுது செய்து வருகிறார்கள் திமுகவினர். கிராமங்களில் மக்கள் கிராம சபை கூட்டங்களை நடத்துவதன் மூலமாக அவர்களுடைய நலனை காப்பது போல வெளியில் காட்டிக் கொள்கின்றார்கள். ஆனாலும் திமுக ஆட்சியில் இருந்த பொழுதுதான் மக்கள் சபை கூட்டம் நடைபெறுவது தடுக்கப்பட்டது என்பது தமிழக மக்கள் அனைவருக்கும் தெரியும் என்று தெரிவித்தார்.

நடிகர் ரஜினிகாந்த், ஆன்மீக அரசியல் தான் புதிய மாற்றத்தை உருவாக்கும் என்று தெரிவித்திருக்கின்றார். அவருடைய இயக்கம் ஆரம்பிக்கப்பட்டு கொள்கை, மற்றும் திட்டங்களை அறிவித்த பின்னரே எந்த மாதிரியான வழியில் நடப்பதற்கு அவர் விருப்பம் கொண்டு இருக்கின்றார் என்று தெரியவரும். எங்கள் கட்சியினுடைய தேசியத் தலைமை என்ன தெரிவிக்கின்றதோ அதைதான் தமிழக மாநில பாரதிய ஜனதா கட்சி செயல்படுத்தி வருகின்றது. என்பதை அதிமுகவினர் புரிந்துகொள்ள வேண்டும் என்று சி.பி. ராதாகிருஷ்ணன் தெரிவித்திருக்கின்றார்.சகலமும் நாங்கள்தான்! கெத்து காட்டும் பாஜக!