சிக்கனை மயோனைஸ் உடன் சாப்பிட்ட பெண் உயிரிழப்பு! கேரளா மாநிலத்தில் கடந்த அதிர்ச்சி சம்பவம்! 

Photo of author

By Sakthi

சிக்கனை மயோனைஸ் உடன் சாப்பிட்ட பெண் உயிரிழப்பு! கேரளா மாநிலத்தில் கடந்த அதிர்ச்சி சம்பவம்! 

Sakthi

Woman died after eating chicken with mayonnaise! The last shocking incident in the state of Kerala!
சிக்கனை மயோனைஸ் உடன் சாப்பிட்ட பெண் உயிரிழப்பு! கேரளா மாநிலத்தில் கடந்த அதிர்ச்சி சம்பவம்!
கேரளா மாநிலத்தில் சிக்கனை மயோனைஸ் உடன் சேர்த்து சாப்பிட்ட பெண் ஒருவர் உயிரிழந்து சம்பவம் கேரளாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளா மாநிலம் திருச்சூர் மாவட்டத்தை சேர்ந்தவர் நுசைபா. இவர் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள மூணுபீடிகை என்ற பகுதியில் உள்ள தனியார் உணவகம் ஒன்றில் குழிமந்தி சிக்கனை ஆர்டர் செய்து சாப்பிட்டுள்ளார். இந்த குழிமந்தி சிக்கனுடன் சேர்த்து மயோனைஸ் சாப்பிட்ட நுசைபா அவர்களுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது.
இதையடுத்து சிகிச்சைக்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் நுசைபா அவர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மேலும் குழிமந்தி சிக்கனை மயோனைஸ் சேர்த்து சாப்பிட்ட 85 பேருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த குழிமந்தி சிக்கனுடன் மயோனைஸ் சேர்த்து சாப்பிட்டு பாதிப்புக்கு உள்ளான 187 பேர்  மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மூணுபீடிகையில் உள்ள தனியார் உணவகத்தில் சாப்பிட்ட மேலும் பலருக்கு வாந்தி, வயிற்றுப் போக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தகவல் அறிந்து தனியார் உணவகத்தில் அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.
ஆய்வின் முடிவில் உணவகத்தில் வழங்கப்பட்ட மயோனைஸ் தான் இந்த பாதிப்புக்கு காரணம் என்று தெரிய வந்துள்ளது. இதையடுத்து அதிகாரிகள் அந்த உணவகத்திற்கு சீல் வைத்துள்ளனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து உணவு பாதுகாப்பு அதிகாரிகள் தனியார் உணவக நிர்வாகத்திடம் விசாரணை நடத்தி வருகின்றனர். சிக்கனை மயோனைஸ் உடன் சேர்த்து சாப்பிட்டாதால் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.