பெண்கள் இந்த பூஜை வழிபாட்டை கட்டாயம் மேற்கொள்ள வேண்டும்..!! தரித்திரம் நீங்கி லட்சுமி கடாட்சம் உண்டாகும்..!!

Photo of author

By Janani

பெண்கள் இந்த பூஜை வழிபாட்டை கட்டாயம் மேற்கொள்ள வேண்டும்..!! தரித்திரம் நீங்கி லட்சுமி கடாட்சம் உண்டாகும்..!!

Janani

இந்த உலகில் உள்ள அனைவரும் கஷ்டப்பட்டு உழைப்பதற்கு காரணம் பணம் வேண்டும் என்பதற்காக மட்டுமே. பணம் இல்லாமல் எவராலும் வாழ்க்கையை நடத்த முடியாது. எனவே தான் மனிதனாய் பிறந்த அனைவரும் வேலைக்கு சென்று உழைத்து பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற கடமை ஒவ்வொருவருக்கும் உண்டு.

ஒரு சிலர் கடினமாக உழைத்து பணம் சம்பாதித்தாலும் அந்த பணத்தை சிறிதளவும் கூட சேமித்து வைக்க முடியாது. ஏதேனும் ஒரு பண விரயம் ஏற்படுவதற்கான சூழ்நிலை வந்து கொண்டே இருக்கும். வரக்கூடிய செலவுகள் சுபச் செலவுகளாக இருந்தாலும் கூட பரவாயில்லை, ஆனால் அசுப செலவுகள் ஆகவே வந்து கொண்டு இருக்கும். இதனால் பணம் சம்பாதித்தும் ஒரு அர்த்தம் இல்லாமல் இருக்கும்.

ஒருவரது வாழ்க்கை சுபிட்சமாக அமைய வேண்டும் என்றால் நல்ல வேலை, நல்ல படிப்பு, நல்ல சம்பாத்தியம், பணம் சேமிக்க கூடிய சூழ்நிலை இவை அனைத்தும் ஏற்பட வேண்டும். ஆனால் அதற்கு மகாலட்சுமியின் அருள் இருந்தால் மட்டுமே முடியும்.

மகாலட்சுமியின் அருள் நமக்கு கிடைக்க வேண்டும் என்றால் நாம் தான் அதற்கு முயற்சிக்க வேண்டும். அதாவது ஒரு குழந்தையை நாம் திட்டிக்கொண்டே இருந்தால் அது நம்மிடம் வராது. அந்த குழந்தையை அன்பாக அரவணைத்து பாசம் காட்டினால் மட்டுமே நம்மிடம் வரும். அது போல தான் மகாலட்சுமியின் வருகை உங்களது இல்லத்திற்கு கிடைக்க வேண்டும் என்றால் மகாலட்சுமியை அனு தினமும் பூஜிக்க வேண்டும்.

மகாலட்சுமியின் அருள் உங்கள் வீட்டிற்கு கிடைக்க வேண்டும் என்றால், தினமும் மகாலட்சுமி தாயாருக்கு பூஜை செய்ய வேண்டும். மகாலட்சுமி தாயாரின் விக்கிரகம் உங்கள் வீட்டில் இருக்கிறது என்றால், அந்த விக்கிரகத்திற்கு தினமும் அபிஷேகம் செய்ய வேண்டும். தண்ணீர், பசும்பால், சுத்தமான சந்தனம் ஆகியவற்றை கொண்டு அபிஷேகம் செய்ய வேண்டும்.

விக்கிரகம் இல்லாதவர்கள் மகாலட்சுமி தாயாரின் புகைப்படத்தை சுத்தம் செய்து, சுத்தமான சந்தனம் மற்றும் குங்குமத்தை கொண்டு பொட்டு வைத்துக் கொள்ள வேண்டும். உங்களால் எவ்வாறு அலங்கரிக்க முடியுமோ, அவ்வாறு மகாலட்சுமி தாயை அலங்கரித்துக் கொள்ள வேண்டும். அதன் பிறகு குங்குமம் மற்றும் பூக்களை கொண்டு அர்ச்சனை செய்ய வேண்டும்.

அர்ச்சனை செய்த பிறகு மகாலட்சுமிக்கு உகந்த நாமங்களை படிக்க வேண்டும். பெரிய நாமங்களை கூறாவிட்டாலும் கூட “ஓம் மகாலட்சுமியே நமஹ”என்ற எளிய நாமத்தை கூறி வழிபட்டு கொள்ளலாம். 108, 54, 27 முறை என உங்களால் முடிந்த அளவிற்கு தினமும் இந்த நாமத்தை கூறி தாயாரை வணங்க வேண்டும்.

உங்களால் முடிந்த நெய்வேத்தியத்தை மகாலட்சுமி தாயாருக்கு படைத்துவிட்டு, கற்பூர ஆரத்தி காண்பித்து வழிபட வேண்டும். இந்த முறைகளைக் காட்டிலும் இன்னும் சிறப்பாக தாயாரை வணங்க வேண்டும் என்று நினைத்தால் இட்லி பூ என்று அழைக்கக்கூடிய பூவினை கொண்டு அர்ச்சனை செய்யலாம். இந்த பூவினை தேன், காய்ச்சாத பசும்பால் ஆகியவற்றில் நினைத்து அர்ச்சனை செய்ய வேண்டும்.

மாதுளை பழத்தின் முத்துக்களைக் கொண்டும் அர்ச்சனை செய்யலாம். இவ்வாறு வழிபடும் பொழுது அனைத்து விதமான பலன்களும் நமக்கு கிடைக்கும். இதனால் அஷ்ட லட்சுமிகளின் வருகையும் உங்களது இல்லத்திற்கு கிடைக்கும். மேலும் மகாலட்சுமி தாயாருக்கு அர்ச்சனை செய்த பூக்களை நிலை வாசலின் இரண்டு புறங்களிலும், வீட்டின் எட்டுத் திக்குகளிலும் வைப்பதன் மூலம் மகாலட்சுமியின் பாதுகாப்பு கவசம் வீடு முழுவதும் நிறைந்து இருக்கும்.

மகாலட்சுமியின் அருள் நமக்கு கிடைத்து விட்டால் போதும் நாம் உழைக்கின்ற உழைப்புக்கு ஒரு அர்த்தம் கிடைத்துவிடும். வாழ்கின்ற வீட்டில் நிம்மதி பிறக்கும். பணவரவு அதிகரித்து, வீட்டில் பணம் தங்கும் சூழ்நிலையும் ஏற்படும்.