தையல் தெரிந்த பெண்களுக்கு அடித்த ஜாக்பாட்; மிஸ் பண்ணிடாதீங்க உடனே விண்ணபியுங்கள்!!

0
22

தமிழக அரசு சார்பாக பெண்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் உதவித்தொகை என பல்வேறு வகையான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வரும் நிலையில், சுயவேலை வாய்ப்புக்கு கடன் உதவியும் வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில் தமிழக அரசு தற்போது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் பெண்கள் திறன் மற்றும் அறிவு பெறுவதினால் அதிகாரம் அடைவதன் மூலம் பாலின சமத்துவத்தை உறுதி செய்ய முடியும். பெண்கள் சுதந்திரமாக செயல்பட வழிவகை செய்ய முடியும் என்பதால் அவர்களுடைய பொருளாதார தரத்தை மேம்படுத்துவதற்காகவும் அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்காகவும் பல்வேறு திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது.

மேலும் தொழில் கூட்டுறவு சங்கங்களில் சமுதாயத்தில் பின்தங்கிய 18 வயதிற்கும் மேல் 40 வயதிற்கு உட்பட்ட பெண்களுக்கு மட்டுமே உறுப்பினர்களாக சேர முடியும். வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ள பெண்கள் இந்த சங்கங்களில் உறுப்பினர்கள் ஆக்கப்பட்டு அவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு வருகின்றது. மேலும் தையல் தெரிந்திருந்தால் அவர்களுடைய ஆண்டு வருமானம் ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாயாக இருந்தால் மட்டும் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

மேலும் இதில் கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், பொருளாதாரத்தில் நலிந்த பிரிவை சேர்ந்த பெண்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஆண்கள் மற்றும் பெண்கள் சமூக ரீதியாக பாதிக்கப்பட்டிருந்தால் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் மூலம் இலவச தையல் இயந்திரம் வழங்கப்படுகின்றது. இதற்கு அருகே உள்ள இ சேவை மையத்தின் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Previous article18 மாத நிலுவை தொகை; மத்திய அரசு ஊழியர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறுமா!
Next articleஉரிமை மீட்பு பேரணி.. ராமதாஸுக்கு எண்டு கார்டு போட்ட அன்புமணி!!