புடவை கட்டும் பெண்களுக்கு புதிய வகை கேன்சர்!! மருத்துவர்கள் எச்சரிக்கை!! ஆய்வில் அதிர்ச்சி தகவல்!!

Photo of author

By Jeevitha

நம் இந்தியாவில் பெண்கள் அனைவரும் புடவை அணிவது வழக்கம். அந்த வகையில் புடவை கட்டும் பெண்களுக்கு புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளதாக ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் நம் இந்தியாவில் பெண்கள் சேலை அணிவது வழக்கம். அதேபோல் பண்டிகை காலகட்டத்தில் பெண்கள் அனைவரும் புது டிசைன் உள்ள பல புடவைகளை தேடி தேடி வாங்குவார்கள்.

ஆண்களை விட பெண்களுக்கு அதிக டிசைன்கள் இருப்பதால் கடைக்குள் சென்றாலே எந்த துணி எடுப்பது என்று தெரியாமல் தவிக்கிறார்கள். அதனால் தான் பெண்கள் அதிகம் புது ஆடை வாங்க விரும்புகிறார்கள். இவ்வாறு சேலை வாங்குவதில் நம் இந்திய பெண்மணிகள் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில் ஒரு சோதனையில் ஒரு முக்கிய அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் வர்தாவில் உள்ள ஜவஹர்லால் நேரு மருத்துவக் கல்லூரி மற்றும் பிகாரில் உள்ள மதுபானி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பெண்கள் புடவை அணிவது குறித்து சிறப்பு ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது. அதில் இரண்டு பெண்களை மருத்துவர்கள் சோதனைக்கு உட்படுத்தினர். அந்த சோதனையில் பெண்கள் புடவை அணியும் போது சேலை கலையாமலும் அவிழ்ந்து விடாமலும் இருபதற்காக பாவாடையை மிகவும் இறுக்கமாக அணிகின்றனர்.

இதுபோல் தொடர்ந்து இறுக்கமாக அணிவது மூலம் பெண்களுக்கு இடுப்பு பகுதியில் அழற்சி, புண் போன்றவை ஏற்படுகிறது. இந்த புண் ஒரு இல காலகட்டத்தில் தோல் புற்றுநோய் ஏற்படும் நிலையை ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் மேற்கொண்ட ஆய்வில் கூறப்படுகிறது. இதனால் பெண்கள் அனைவரும் அதிர்ச்சியில் உள்ளார்கள்.