பெண்களுக்கான மகளிர் உரிமைத் தொகை திட்டம்… தமிழகம் முழுவது 1.5 கோடி விண்ணப்பங்கள் வரவேற்பு!!

0
129

 

பெண்களுக்கான மகளிர் உரிமைத் தொகை திட்டம்… தமிழகம் முழுவது 1.5 கோடி விண்ணப்பங்கள் வரவேற்பு…

 

பெண்களுக்கான மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு கீழ் மாதம் 1000 ரூபாய் பெறுவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வந்த நிலையில் இதற்கான நாள் நேற்றுடன்(ஆகஸ்ட்20) நிறைவு பெற்றது. இதையடுத்து 1.5 கோடி பெண்கள் விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

தமிழகம் முழுவதும் மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கு விண்ணப்பம் கொடுப்பதற்கு முதல்கட்ட முகாம் கடந்த ஜூலை 24ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 4ம் தேதி வரை நடைபெற்று வந்தது. இரண்டாம் கட்ட விண்ணப்ப முகாம் ஆகஸ்ட் 4

5ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 16ம் தேதி வரை நடைபெற்றது. இரண்டு முகாம்களிலும் விண்ணப்பிக்க தவறியவர்களுக்கு ஆகஸ்ட் 18ம் தேதி முதல் தொடங்கி ஆகஸ்ட் 20 வரை அதாவது நேற்று வரை நடைபெற்றது.

 

இந்நிலையில் மகளிர் உரிமை தொகை திட்டத்திற்கு விண்ணபிக்க கால அவகாசம் நேற்றுடன் முடிந்த நிலையில் இதுவரை 1.55 கோடிக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

அதாவது 1.55 கோடிக்கும் மேற்பட்ட பெண்களின் விண்ணப்பங்கள் பெறப்பட்டு கைபேசி வழியாக அவர்களின் விவரங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. தற்பொழுது இந்த விவரங்கள் மீது பரிசீலனை நடைபெற்று வருவதாகவும் பரிசீலனை முடிவு பெற்ற பிறகு விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்பட்டதா அல்லது நிராகரிக்கப்பட்டதா என்று விண்ணப்பம் செய்த அனைவருக்கும் குறுஞ்செய்தி மூலமாக அனுப்பபடும் என்று தகவல் கிடைத்துள்ளது.

 

ஆகஸ்ட் மாதம் இறுதிக்குள் அனைத்து விண்ணப்பங்களையும் பரிசீலனை செய்து முடிக்க அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக கள ஆய்வுகளும் நடத்தப்படவுள்ளது. மேலும் இதற்கான அறிவிப்புகள் கூடிய விரைவில் அறிவிக்கப்படவுள்ளது.

 

அதுமட்டுமில்லாமல் வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்காதவர்களுக்கு ஒலிப்பதிவு மூலமாக தொலைபேசி அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. அந்த ஒலிப்பதிவில் வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்காதவர்கள் அனைவரும் உடனடியாக இணைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

 

மகளிர் உரிமை தொகை திட்டத்திற்கான முகாம் முடிவடைந்த நிலையில் மக்கள் மீண்டும் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கான முகாமை நீட்டிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். இதையடுத்து எதிர்பார்க்கப்பட்ட அளவுக்கு மேல் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு விண்ணப்பங்கள் வந்துள்ளதால் முகாம் நீட்டிக்கப்பட வாய்ப்புகள் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

Previous articleகாதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்கள்… திருமணம் செய்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட காதல் ஜோடி!!
Next articleஇந்திய விஞ்ஞானிகளை அவமதித்து புதிய சர்ச்சையில் சிக்கிய நடிகர் பிரகாஷ்ராஜ்!!