தொழிலாளி தற்கொலை! அதிர்ச்சியில் குடும்பம்!

தொழிலாளி தற்கொலை! அதிர்ச்சியில் குடும்பம்!

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பிரச்சனை. தற்போதெல்லாம் மக்கள் சின்ன மன வருத்தம் அடைந்தாலே உயிரை மாய்த்து கொள்ளும் அளவுக்கு முடிவெடுத்து விடுகின்றனர்.

எவ்வளவோ கஷ்டங்களை தாங்கி சிலர் தங்கள் குடும்பங்களை பார்த்து வரும் நிலையில் ஒன்றுமே இல்லாத விசயங்களுக்காக மக்கள் தற்கொலை செய்வது அவர்களின் குடும்பத்தை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள அட்டவளை கிராமத்தை சேர்ந்தவர் ராஜகோபால்(வயது38). தொழிலாளி. இவருக்கு திருமணமாகி திவ்யா(28) என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். இந்த நிலையில் ராஜகோபால் கடந்த சில ஆண்டுகளாக ரத்தசோகை நோயால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் அவர் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்தார். நேற்று முன்தினம் மதியம் ராஜகோபால் வீட்டில் இருந்து வெளியே சென்றார். மாலை நீண்ட நேரமாகியும் அவர் வீட்டிற்கு திரும்பாததால், சந்தேகமடைந்த உறவினர்கள் அவரை தேடினர்.

அப்போது அங்குள்ள சுடுகாட்டில் தகர கொட்டகையில் ராஜகோபால் தூக்கில் தொங்கி கொண்டு இருந்தார். இதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ராஜகோபால் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இந்த சம்பவம் குறித்து கோத்தகிரி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த செய்தி அந்த பகுதியில் உள்ள அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது குரிப்பிடதக்கது.

Leave a Comment