மைக்ரோ சாப்டில் வேலை! சம்பளம் 2 கோடி! அதிர்ஷ்டகார பொண்ணு!

Photo of author

By Hasini

மைக்ரோ சாப்டில் வேலை! சம்பளம் 2 கோடி! அதிர்ஷ்டகார பொண்ணு!

பெற்றோர் அனைவருக்கும் தங்கள் பிள்ளைகள் நல்ல வேலையில் சேர்ந்து கை நிறைய சம்பளம் வாங்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும்.ஆனால் அனைவருக்கும் அந்த கனவு பலிக்குமா என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

அந்த வகையில், தெலுங்கானா மாநிலம், ஐதராபாத்தை சேர்ந்தவர் தீப்தி.ஐதராபாத்தில் உள்ள உஸ்மானியா என்ஜினியரிங் பல்கலையில் மென்பொருள் துறையில் இளங்கலை பட்ட படிப்பு படித்த தீப்தி, அமெரிக்க நிதி நிறுவனமான ஜெபி மோர்கன் நிறுவனத்தில் என்ஜீனியராக பணியாற்றி கொண்டு இருந்தார்.

கடந்த 3 ஆண்டுக்கு முன் அந்த வேலையை ராஜினாமா செய்துவிட்டு மேற்படிப்பிற்காக அமெரிக்கா சென்று புளோரிடா யுனிவெர்சிட்டியில் எம்.எஸ். படிக்க கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி படித்து வந்தார்.

சமீபத்தில் தான் படிப்பை முடித்தார். அப்போது நடந்த வளாக தேர்வில்,மைக்ரோசாப்ட் கம்பெனியில் தேர்வானார்.ஆண்டுக்கு 2 கோடி சம்பளத்தில் தேர்தெடுக்கப்பட்டுள்ளார்.

அந்த நிறுவனத்தில் 300 மாணவர்களை தேர்ந்து எடுத்துள்ளது.அதில் தீப்தி மட்டுமே அதிக ஊதிய பிரிவில் கிரேடு 2 என்ஜினியர் ஆக தேர்தெடுக்க பட்டுள்ளார்.

அவருக்கு பல நிறுவனங்களில் வேலை கிடைத்தாலும் அவர் மைக்ரோசாப்ட்டையே தேர்தெடுத்து உள்ளார்.

இது பற்றி அவர், அவரது இணையத்தில் கூறியதாவது, அன்றாட பிரச்சினைகளை தீர்ப்பதில் தொழில்நுட்பங்கள் பெரிதும் உதவி புரிகின்றன. மனிதர்களின் வாழ்வை மாற்றி அமைப்பதில் தொழில்நுட்பங்கள் பெரும் தாக்கம் செலுத்துகின்றன என்றார்.

இவரது தந்தை ஐதராபாத்தில் போலீஸ் துறையில் தடயவியல் நிபுணராக உள்ளார்.