Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

உலகக் கோப்பை போட்டிகளுக்கான அட்டவணை வெளியீடு!! சென்னையில் 8 போட்டிகள் நடைபெறவுள்ளதாக தகவல்!!

#image_title

உலகக் கோப்பை போட்டிகளுக்கான அட்டவணை வெளியீடு!! சென்னையில் 8 போட்டிகள் நடைபெறவுள்ளதாக தகவல்!!

ஒருநாள் உலகக் கோப்பை தொடர் இந்தியாவில் நடைபெறும் என்று ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்த நிலையில் தற்போது போட்டிகளின் அட்டவணை வெளியாகியுள்ளது.

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம், நியூசிலாந்து , இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா மற்றும் இந்தியா  போன்ற அணிகள்  களம்  இறங்கி இருக்கிறது. மேலும் அக்டோபர் 5  ஆம் தேதி முதல் நவம்பர் 19 ஆம் தேதி வரை நடக்கவிருக்கிறது.

மேலும் முதல் அரை இறுதி போட்டி நவம்பர் 15 ஆம் தேதியும் இரண்டாவது அரை இறுதி போட்டி நவம்பர் 16 ஆம் தேதியும் நடைபெற உள்ளது. இந்த இரண்டு போட்டிகளும் மும்பை மற்றும்  கொல்கத்தாவிலும் நடைபெறவுள்ளது. முதல் போட்டி அக்டோபர் 5 ஆம் தேதி  இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே அகமதாபாத்தில் நடைபெறவுள்ளது. அதனையடுத்து இறுதிப் போட்டி நவம்பர் 19 ஆம் தேதி அலகாபாத் மைதானத்தில் நடைபெறவிருக்கிறது.

இந்தியா அணிக்கான போட்டி அட்டவணை

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா              – சென்னை       : அக்டோபர் 8

இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான்         – டெல்லி             : அக்டோபர் 11

இந்தியா மற்றும் பாகிஸ்தான்                   -அகமதாபாத்  : அக்டோபர் 15

இந்தியா மற்றும் வங்கதேசம்                   -புணே                  : அக்டோபர் 19

இந்தியா மற்றும் நியூசிலாந்து               -தர்மசாலா         : அக்டோபர் 22

இந்தியா மற்றும் இங்கிலாந்து              -லக்னௌ            : அக்டோபர் 29

குவாலிபையர் 1                                              -மும்பை              : நவம்பர் 2

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா -கொல்கத்தா   : நவம்பர் 5

குவாலிபையர் 2                                               -பெங்களூரு   : நவம்பர் 11

மேலும் இந்த ஒருநாள் உலகக்கோப்பை போட்டிகள் சென்னை  5 போட்டிகள் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version