Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

உலகக் கோப்பை தொடர் 2023!!! மூன்றாவது வெற்றியை பதிவு செய்த நியூசிலாந்து!!! 

#image_title

உலகக் கோப்பை தொடர் 2023!!! மூன்றாவது வெற்றியை பதிவு செய்த நியூசிலாந்து!!!
வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி நடப்பாண்டு உலகக் கோப்பை தொடரில் மூன்றாவது வெற்றியை பதிவு செய்து இருக்கின்றது.
உலகக் கோப்பை தொடரில் நேற்று(அக்டோபர்13) நடைபெற்ற போட்டியில் நியூசிலாந்து அணி வங்கதேச அணியை எதிர்த்து விளையாடியது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணிபந்துவீச்சசை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் களமிறங்கிய வங்கதேச அணி 50 ஓவர்களில் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 245 ரன்கள் சேர்த்தது.
வங்கதேச அணியில் அதிகபட்சமாக முஸ்பிகூர் ரஹிம் அரைசதம் அடித்து 66 ரன்கள் சேர்த்தார். மஹமுதுல்லா 41 ரன்களும், ஷாகிப் அல் ஹசன் 40 ரன்களும் சேர்த்தனர். நியூசிலாந்து அணியில் லக்கி பெர்குசன் சிறப்பாக பந்துவீசி 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். டிரென்ட் போல்ட், மேட் ஹென்றி ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதையடுத்து 246 ரன்களை இலக்காகக் கொண்டு களமிறங்கிய நியூசிலாந்து அணி இரண்டு விக்கெட்டுகளை மட்டும் இழந்து 42.5 ஓவர்களில் 248 ரன்களை எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
நியூசிலாந்து அணியில் அதிகபட்சமாக கிளென் பிலிப்ஸ் அரைசதம் அடித்து 89 ரன்கள் எடுத்து நியூசிலாந்து அணியின் வெற்றிக்கு உதவினார். மறுபுறம் சிறப்பாக விளையாடிய கேன் வில்லியம்சன் அரைசதம் அடித்து 78 ரன்கள் சேர்த்தார். இதன் மூலம் நடப்பு உலகக் குப்பை தொடரில் தனது மூன்றாவது வெற்றியை நியூசிலாந்து அணி பதிவு செய்து புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் நீடித்து வருகின்றது.
Exit mobile version