நம்முடைய அண்டை நாடான இலங்கையில் இந்தியாவைப் போன்று அல்லாமல் அதிபர் ஆட்சி முறை நடைபெற்று வருகிறது. அந்த நாட்டில் அதிபருக்கு எல்லையற்ற அதிகாரம் வழங்கப்பட்டிருக்கிறது.
அதாவது அதிபரின் கீழ் தான் ஆட்சி நடைபெறும் அவரே பிரதமர் மற்றும் அமைச்சரவை சகாக்களை முடிவு செய்வார். மேலும் நாட்டின் அரசியல் சாசனத்தை பொறுத்தவரையில் அதிபரே அனைத்துமாக திகழ்ந்து வருபவர்.
குறிப்பிட்டுச் சொல்லவேண்டும் என்று சொன்னால் அமெரிக்காவைப் போன்று அதிகார அந்தஸ்துடைய ஒட்டுமொத்த அதிகாரத்தையும் தன் கையில் வைத்திருக்கும் நாட்டின் மிக முக்கிய புள்ளியாக விளங்கி வருபவர் அதிபர்.
இந்தநிலையில் இலங்கையில் கடந்த 2020 ஆம் வருடம் ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அதிபருக்கு மேலே தெரிவித்த கட்டுப்பாடற்ற அதிகாரங்கள் வழங்கப்பட்டு அரசியல் சாசனத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டதாக தெரிகிறது.
இந்த அரசியல் சாசன திருத்தம் ராஜபக்சே குடும்ப உறுப்பினர்கள் முக்கிய பதவிகளை பெறவும், வழிவகை செய்தது நாடாளுமன்றத்திற்கு அதிபரை விட கூடுதலான அதிகாரங்களை வழங்கிய 19ஆவது சட்டத்திருத்தம் ரத்து செய்யப்பட்டது.
தற்சமயம் இலங்கையில் இதுவரை இல்லாத விதத்தில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது விலைவாசி விண்ணை முட்டுமளவிற்கு அதிகரித்திருக்கின்றன. கடுமையான மின்வெட்டு அமலிலிருக்கிறது.
இந்த நெருக்கடிக்கு அதிபர் கோத்தபய ராஜபக்சே குடும்பத்தைச் சார்ந்தவர்கள் தான் காரணம் என பொதுமக்கள் அங்கே கருதி வருகிறார்கள். இதன் காரணமாக, அவர்களை ஆட்சி அதிகாரத்திலிருந்து அகற்ற மிகப்பெரிய போராட்டத்தை இலங்கை மக்கள் கையில் எடுத்திருக்கிறார்கள்.
இந்த போராட்டத்தை அடக்குவதற்காக வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டிருக்கிறது. நெருக்கடி முற்றிய சூழ்நிலையில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ திடீரென்று பதவி விலகினார்.
இந்தநிலையில் புதிய இலங்கை பிரதமராக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரனில் விக்ரமசிங்கே பதவியேற்றுக்கொண்டார் இதனை தொடர்ந்து அந்த நாட்டில் அதிபருக்கு வழங்கப்பட்டுள்ள கட்டுப்பாடற்ற வரம்பற்ற அதிகாரங்கள் ரத்து செய்யப்படும் என்ற தகவல் வெளியாகின.
தற்சமயம் அதற்கான அரசியல் சாசன திருத்தம் கொண்டு வரப்படுகிறது என சொல்லப்படுகிறது. இதனைத்தொடர்ந்து நீதித்துறை அமைச்சர் டாக்டர் விஜயதாஸ ராஜபக்ஷ பேட்டி ஒன்றை வழங்கினார்.
அதில் அவர் தெரிவித்ததாவது அதிபருக்கு அதிக அளவிலான அதிகாரங்களை வழங்கிய அரசியல் சாசனத்தின் 20ஏ பிரிவை செல்லாதது என தெரிவிக்கும் வகையில் அரசியல் சாசனத்தின் 20ஆவது திருத்த மசோதா அமைச்சரவை கூட்டத்தில் இன்று ஒப்புதலுக்கு வைக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
இந்த அரசியல் சாசனம் திருத்தம் தற்போதைய தரவுகளை மேலும் வலுப்படுத்தும் கூடுதல் சுயாட்சி க்கும் வழிவகை செய்யும் நாட்டின் மத்திய வங்கிக்கு ஆளுநரை நியமிக்கும் அதிகாரம் அரசியல் சாசன கவுன்சிலின் கீழ் கொண்டு வரவும், புதிய சட்டத்திருத்தம் வழிவகை செய்யும், அதோடு இரட்டைக்குடியுரிமை வைத்திருப்போர் நாடாளுமன்ற உறுப்பினர் ஆவதையும் புதிய சட்டத்திருத்தம் தடைசெய்யும் என்று அவர் கூறியிருக்கிறார்.