உலகிலேயே முதல் முறையாக கண்டுபிடிக்கப்பட்ட பறக்கும் கார்!!! ஒரு முறை சார்ஜ் செய்தால் இத்தனை மைல்கள் போகுமா!!?
உலகிலேயே முதன் முறையாக நமக்கும் காரை கலிப்போர்னியாவை சேர்ந்த நிறுவனம் ஒன்று தயாரித்து காட்சிபடுத்தியுள்ளது. இந்த காரின் விலை மட்டும் பல லட்சம் டாலர் என்று கூறப்படுகிறது.
தற்பொழுது வளர்ந்து வரும் தொழில்நுட்பம் காரணமாக பலவகையான மாற்றங்கள் உலகத்தில் நிகழ்ந்து வருகின்றது. பல வகையான புதிய கண்டுபிடிப்புகள் உலகத்தில் ஏற்பட்டு வருகின்றது. மாட்டு வண்டியில் சாலைகளில் பயணம் செய்யத் தொடங்கிய நாம் தொழில்நுட்பம் வளர்ச்சி காரணமாக தற்பொழுது பைக், கார், பேருந்து, கப்பல், விமானம் என்று நயனம் செய்யத் தொடங்கியுள்ளோம். இன்னும் வருங்காலத்தில் நாம் ராக்கெட்டில் பயணம் செய்யவுள்ளோம்.
அந்த அளவுக்கு தொழில்நுட்பம் வளர்ந்து வரும் நிலையில் தற்பொழுது புதிய புதிய வாகனங்கள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றது. மின்சாரம் மூலம் இயங்கக்கூடிய வாகனங்களின் வருகை தற்பொழுது அதிகமாகி இருக்கின்றது. இந்நிலையில் கலிப்போர்னியாவை சேர்ந்த நிறுவனம் ஒன்று பறக்கும் காரை தயாரித்து காட்சி படுத்தியுள்ளது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது.
அமெரிக்காவின் கலிப்போர்னியாவை சேர்ந்த அலெஃப் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் உலகத்தின் முதன் முதலான பறக்கும் காரை தயாரித்து இருக்கின்றது. பறக்கும் காரின் இந்த முதல் மாடல் பலரையும் கவர்ந்து இருக்கின்றது.
இரண்டு பேர் மட்டும் பயணம் செய்யக்கூடிய வகையில் பறக்கும் கார் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு முறை முழுவதும் சார்ஜ் செய்தால் சாலைகளில் 220 மைல்கள் செல்லும். மேலும் காற்றில் 110 மைல்கள் வரை பயணிக்கும்.
இந்த பறக்கும் காரின் விலையானது மிகவும் அதிகம். உலகத்தின் முதல் பறக்கும் காரின் விலை 3 லட்சம் டாலர்கள் என்று நிறுவனம் கூறியுள்ளது. இந்த பறக்கும் கார் டெட்ராய்ட் ஆட்டோ ஷோவில் காட்சி படுத்தப்பட்டுள்ளது.