உலகளவில் கரோனா வைரஸ் தொற்றுக்கு பலியானோர் எண்ணிக்கை 6.52 லட்சத்தையும் கடந்துள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் வூஹான் நகரில் தோன்றிய கரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பல நாடுகளை முடக்கி வைத்துள்ளது.உலக அளவில் கரோனா பாதிப்பில் அமெரிக்கா, பிரேசிலை அடுத்து 3 ஆவது இடத்தில் இந்தியா உள்ளது.
உலக அளவில் கரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கரோனா பாதிப்பும், கரோனா பலியும் கட்டுப்படுத்த முடியாத வகையில் உயர்ந்து மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஜூலை 27-ம் தேதி நிலவரப்படி உலக அளவில் 1,64,21,952 பேர் கரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர்.ஒட்டுமொத்தமாக கரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 6,52,308 ஆக அதிகரித்துள்ளது.
நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவா்களில் 10,052,482 போ குணமடைந்துள்ளதாகவும். மேலும், 57,17,162 போ தொடா்ந்து சிகிச்சை பெற்று வருவதாகவும், இவர்களில் 66,238 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன