உலகம் முழுவதும் நோய்த் தொற்று பாதிப்பு எண்ணிக்கை 25 கோடியை கடந்தது!

Photo of author

By Sakthi

உலகம் முழுவதும் நடைபெற்ற போரால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கையும், பலியாவோரின் எண்ணிக்கையும், நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. தடுப்பூசி செலுத்தும் பணிகளும் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இருந்தாலும் நோய் தொற்று பிறந்த நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே இருக்கின்றன.

இந்த சூழ்நிலையில், தற்போதைய நிலவரத்தின் அடிப்படையில் உலகம் முழுவதும் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் ஒட்டு மொத்த எண்ணிக்கை 25.21 கோடியைத் தாண்டியிருக்கிறது. இதனடிப்படையில் உலகம் முழுவதும் தற்போது 25 கோடியே 31 லட்சத்து 82 ஆயிரத்து 737 பேருக்கு நோய் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. நோய் பாதிப்பில் இருந்து இதுவரையில் 22 கோடியே 89 லட்சத்து 73 ஆயிரத்து 208 பேர் குண மடைந்திருக்கிறார்கள் அதோடு நோய் இருப்பவர்களுக்கு இது வரையில் 5 லட்சத்து 93 ஆயிரத்து 629 பேர் பலியாகி இருக்கிறார்கள்.