உலகளவில் நோய்த்தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை அதிரடி உயர்வு!

Photo of author

By Sakthi

கலந்த 2019ஆம் ஆண்டு சீனாவில் ஒரு விடுத்த நோய்த்தொற்று பரவல் பின்பு மெல்ல, மெல்ல, உலக நாடுகளுக்கு பரவி சுமார் 200க்கும் மேற்பட்ட உலக நாடுகள் மற்றும் பிரதேசங்களில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. அதிலும் உலக வல்லரசு நாடான அமெரிக்கா இந்த நோய்த்தொற்று காரணமாக, கடுமையான பாதிப்பை சந்தித்திருக்கிறது.

அதோடு மட்டுமல்லாமல் இங்கிலாந்து, பிரான்ஸ், ரஷ்யா, போன்ற மிகப்பெரிய பொருளாதார நாடுகளும் கடுமையான வீழ்ச்சியை சந்தித்திருக்கின்றன இந்த நோய்த்தொற்று பரவல் இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை.

கடுமையான நோய் தொற்று பாதிப்பு இருந்துவந்த சூழ்நிலையில், கடந்த 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் இறுதியில் முழுமையான ஊரடங்கு இந்தியாவில் நாடு தழுவிய முறையில் அமல்படுத்தப்பட்டது. இந்த ஊரடங்கு தற்போது வரையில் தளர்வுகளுடன் நீடித்து வருகிறது.

இந்த நிலையில், இந்த நோய் தொற்றுக்கு எதிராக கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பூசிகளை பொதுமக்களுக்கு மத்திய, மாநில, அரசுகள் செலுத்தி வருகின்றன. அதேபோல உலக நாடுகளும் இந்த நோய் தொற்றுக்கு எதிரான மாத்திரை மற்றும் தடுப்பூசிகளை கண்டுபிடித்து பொதுமக்களுக்கு செலுத்தி வருகின்றன.

ஆகவே நோய் தொற்று மெல்ல,மெல்ல குறைந்து வந்தது. ஆனாலும் மீண்டும் தற்போது இந்த நோய் தொற்று உருமாற்றமடைந்து அதிகரித்து வருவதால் உலக நாடுகளிடையே பீதி ஏற்பட்டிருக்கிறது.

இப்படியான சூழ்நிலையில், உலகம் முழுவதும் நோய்த் தொற்றுக்களால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 50,84,29,686 என்று அதிகரித்திருக்கிறது. நோய்த்தொற்று காரணமாக, பாதிக்கப்பட்டவர்களில் 4,13,64,158 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

நோய்தொற்று பாதிப்பிலிருந்து இதுவரையில் விடுபட்டோரின் எண்ணிக்கை 46,08,25,541 என இருக்கிறது. இருந்தாலும் நோய் தொற்று பாதிப்பு காரணமாக, உலகம் முழுவதும் இதுவரையில் 62,39,987 பேர் பலியாகியிருக்கிறார்கள்.