இன்ப அதிர்ச்சி! உலக அளவில் நோய் தொற்றிலிருந்து குணமடைந்தவரின் எண்ணிக்கை 47 கோடியை கடந்தது!

0
123

கடந்த 2019ஆம் ஆண்டு சீனாவில் தோன்றிய நோய்த்தொற்று பரவல் அங்கிருந்து உலக நாடுகள் பலவற்றிற்கு பரவி மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

உலக நாடுகளில் கிட்டத்தட்ட 220 க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிரதேசங்களில் பரவி மிகப்பெரிய பாதிப்பை உண்டாக்கி வருகிறது. இந்த நோய்த்தொற்று பரவல் இந்த நோய் தொற்றுக்கு எதிரான நடவடிக்கையின் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்த நோய் தொற்றுக்கு எதிரான தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு உலகம் முழுவதும் அந்தந்த நாடுகளின் அரசுகள் வழியாக பொது மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது.ஆனாலும் கூட இந்த நோய்த்தொற்று உருமாற்றமடைந்து தொடர்ந்து பொது மக்களிடையே பரவி வருகிறது.

இந்த சூழ்நிலையில், உலகம் முழுவதும் நோய்த் தொற்று பரவ காரணமாக, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 51,96,43,282 என அதிகரித்திருக்கிறது. இதுவரையில் நோய் தொற்று பாதிப்பு காரணமாக, பாதிக்கப்பட்டவர்களில் சுமார் 3,89,65,511 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

அதோடு 47,43,93,387 பேர் நோய்த்தொற்று பாதிப்பிலிருந்து இதுவரையில் குணமடைந்திருக்கிறார்கள். ஆனாலும் இந்த நோய்த்தொற்று காரணமாக, 62,84,384 பேர் இதுவரையில் உலகளவில் பலியாகியிருக்கிறார்கள்.

Previous articleஇதை அவர்கள் செய்யாவிட்டால் எங்களுக்கு 5 கோடி ரூபாய் இழப்பீடு தரவேண்டும்! சொந்த மகன் மருமகள் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த பெற்றோர்!
Next articleஇந்தியாவில் சற்றே அதிகரித்த நோய் தொற்று பாதிப்பு!