திருமணமாகி நீண்டநாள் குழந்தை பேறு கிடைக்காத பெண்கள் செய்யவேண்டிய பிரார்த்தனைகள்!

0
296

திருமணமாகி நீண்டநாள் குழந்தைப்பேறு கிடைக்காத பெண்கள் செய்யவேண்டிய பிரார்த்தனைகள்!

இந்த உலகத்திலேயே இறைவன் தரக்கூடிய வரங்களில் மிகவும் முக்கியமான வரம் குழந்தை பாக்கியம்.இந்த காலகட்டத்தில் பெண்களுக்கு குழந்தை பாக்கியம் என்பது எளிதில் கிடைக்காத வரமாகவே இருக்கின்றது.குழந்தை பாக்கியத்திற்காக பெண்கள் செல்லாத மருத்துவமனைகள் அல்ல,செய்யாத சிகிச்சைகள் அல்ல,போகாத கோவில்கள் இல்லை.குழந்தை பாக்கியத்திற்காக தவமிருக்கும் பெண்கள் இந்த விரதத்தினை மேற்கொண்டால் குழந்தை பாக்கியம் எளிதில் கிடைத்துவிடும் என்று ஆன்மீக ரீதியாக கூறப்படுகிறது.

குழந்தை பாக்கியம் கிடைக்க செய்யபடும் விரதம் என்ன?

குழந்தை பாக்கியம் கிடைக்க முருகனுக்கு உகந்த சஷ்டி நாளில் செய்யப்படும் இந்த சஷ்டி விரதம் தான்.

சஷ்டி விரதத்தை மேற்கொள்ளும் வழிமுறைகள்?

மாதத்தில் வரும் வளர்பிறை சஷ்டியில் நாம் விரதம் இருக்கத் தொடங்க வேண்டும்.
காலை எழுந்தவுடன் கணவன் மனைவி இருவரும் நீராடி உணவு உண்ணாமல் கந்த சஷ்டி விரதம் மேற்கொள்ள வேண்டும்.

திருமணமாகி நீண்டநாள் குழந்தை பேறு கிடைக்காத பெண்கள் செய்யவேண்டிய பிரார்த்தனைகள்!

முருகப்பெருமானும் வள்ளியும் தெய்வானையும் மயில் மீது அமர்ந்திருக்கும் திருவுருவப்படத்திற்கு செவ்வரளி மாலை சூட்டி பாலும், பழமும், நாட்டுச் சர்க்கரையும், வெற்றிலை பாக்கும்
நெய்வைத்தியமாக படைக்க வேண்டும்.மேலும் உங்கள் வீட்டை சுற்றியுள்ள பகுதியில் பால் குடிக்கும் ஏதேனும் கைக்குழந்தைகள் இருந்தால்,எத்தனை கைக்குழந்தைகள் இருக்கின்றதோ அத்தனை சங்கடைகள் (சங்கு)வாங்கி அதில் பால் ஊற்றி வைத்து,முருகனுக்கு உகந்த ஏதாவது ஒரு திருப்புகழைப் பாடி பூஜை செய்ய வேண்டும்.

திருமணமாகி நீண்டநாள் குழந்தை பேறு கிடைக்காத பெண்கள் செய்யவேண்டிய பிரார்த்தனைகள்!

பூஜை முடிந்த பின்பு அந்தப் பாலும் பழத்தையும் சிறு குழந்தைகள் இருந்தால் அவர்களுக்கு கொடுக்கலாம்.குழந்தைகள் இல்லையெனில் அதை கணவனும் மனைவியும் பங்கிட்டு உன்ன வேண்டும்.

பின்னர் அந்த சங்கில் ஊற்றி வைத்த பாலை சங்கோடு சேர்த்து உங்கள் அருகில் உள்ள குழந்தைகளுக்கு தானமாக கொடுக்க வேண்டும்.தானமாக கொடுக்கும் பொழுது அந்த தாயிடம் நான் குழந்தைப்பேறு வேண்டி பிரார்த்தனை செய்து உள்ளேன்.எனக்கு குழந்தை பேறு கிடைக்க நீங்களும் பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று உங்கள் பிரார்த்தனையை தெரிவித்து விட்டு கொடுக்கவேண்டும்.

சஷ்டியில் இருந்தால் அகப்பையில் கிடைக்கும் என்னும் பழமொழிக்கு ஏற்ப நாம் சஷ்டி தினத்தன்று விரதம் இருந்து அந்த முருகப்பெருமானை வழிபட்டு வந்தால் விரைவில் குழந்தை பாக்கியம் கிட்டும்.

Previous articleஇந்திய அணியின் ஆல்ரவுண்டருக்கு குழந்தை பிறந்துள்ளது
Next articleஎன் மனம் கவர்ந்த பேட்ஸ்மேன் இவர்தான் – சாகித் அப்ரிடி விளக்கம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here