திருப்புகழில் முருகனைக் குறித்து அருணகிரிநாதர் கூறியதாவது, “அரை நிமிடம் மட்டும் உள்ளம் உருகி, கண்ணீர் பெருகி, உண்மையான அன்புடனும், உண்மையான பக்தியுடனும், உண்மையான காதலுடன் வேறு எதையும் வேண்டாமல், முருகா நீ மட்டும் தான் எனக்கு வேண்டும் என்று யார் ஒருவர் முருகனின் திருவடியை பிடிக்கிறார்களோ” அவர்களுக்கு தேவையான சகல விதமான யோகங்களும் கிடைக்கும் என்று அருணகிரிநாதர் அவர்கள் கூறியுள்ளார்.
ஆனால் மக்களாகிய நாம் கடவுளிடம் சென்றாலே ஒரு லிஸ்ட்டையே வைத்திருப்போம், அதை கொடு இதை கொடு என்று கேட்டுக் கொண்டே இருப்போம். ஆனால் நம்மை படைத்த (பெற்ற) கடவுளுக்கு தெரியும் நமக்கு எது தேவை? எது கொடுக்க வேண்டும்? என்று எனவே கடவுள் நமக்கு வேண்டியதை கண்டிப்பாக கொடுப்பார்.
அதிலும் முருக பெருமான் கேட்டதை கேட்ட வண்ணம் கொடுக்கக் கூடியவர் அல்ல. நாம் நினைத்ததை நினைத்ததற்கும் மேலாக நமக்கு கொடுக்கக் கூடியவர். அதிலும் முருகப்பெருமானுக்கு நமக்கு கொடுப்பதற்கு என 12 கரங்கள் உள்ளன. ஆனால் நமக்கு வாங்குவதற்கு இரண்டு கரங்கள் மட்டுமே உள்ளது. இவ்வாறு நாம் நினைத்ததற்கும் மேலாக அள்ளி அள்ளி கொடுக்கக் கூடியவர் முருகப்பெருமான்.
அத்தகைய வள்ளல் பெருமான் தான் நமது முருகப்பெருமான். அதேபோன்றுதான் வள்ளி தேவியும். இவர்கள் இருவரும் மக்களாகிய நமக்கு பல்வேறு நலன்களை அள்ளிக் கொடுக்க தயாராக இருக்கிறார்கள். அதனை வாங்குவதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்றால் அரை நிமிடமாவது மனம் உருகி முருகனை நினைக்க வேண்டும்.
முருகப் பெருமானை உள்ளம் உருகி அதாவது முழுமையாக நமது ஆன்மா முருகப்பெருமானிடம் சரணாகதி அடைந்து “முருகா நீ எனக்கு எதை கொடுத்தாலும் சரி உனது அடி தொண்டனாக என்னை ஏற்றுக் கொண்டால் போதும்”என்ற விண்ணப்பத்தை முருகப் பெருமானிடம் வைத்துவிட்டு, திருப்புகழை பாடினோம் என்றால் அதனால் கிடைக்கக்கூடிய பலனுக்கு நிகர் வேறு எதுவும் இல்லை.
முருகப்பெருமானை அரை நிமிடம் உள்ளம் உருகி நினைத்து, இந்த திருப்புகழை படித்தோம் என்றால் சகல விதமான சௌபாக்கியங்களும் நமக்கு கிடைக்கும். இவை அனைத்துக்கும் மேலாக முருகப்பெருமானின் அருள் பரிபூரணமாக நமக்கு கிடைக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் கிடையாது.
முருகப் பெருமானுடைய திருப்புகழுக்கு அத்தனை மகிமைகள் உள்ளது. எனவே அனுதினமும் முருகனை நினைத்து திருப்புகழை படித்தோம் என்றால் நாம் வேண்டிய அனைத்தும் மற்றும் நமக்கு வேண்டிய அனைத்தும் நிச்சயம் கிடைக்கும்.