ஒரு வேலையில் நிரந்தரமாக இருக்க முடியவில்லையா:?அப்போ இந்த தெய்வ வழிபாட்டை செய்து பாருங்கள் எப்படியாப்பட்ட வேலையும் உங்கள் கைவசம்!!

Photo of author

By Pavithra

ஆண்களாக இருக்கட்டும் பெண்களாக இருக்கட்டும் அவர்களின் மனதிற்கு பிடித்த வேலை கிடைக்கவில்லை என்றால் அவர்களின் குடும்பத்திலேயே சந்தோசம் நிலவாது.மனதிற்குப் பிடித்த வேலை கிடைக்கவில்லை என்றால் வாழ்க்கையே வெறுப்பாகிவிடும்.நல்ல வேலை கிடைக்க நிரந்தரமான வேலை கிடைக்க இந்த தெய்வங்களை வழிபடுங்கள்.நல்ல வேலைக்கும்,நிரந்தரமான வேலைக்கும் தெய்வவழிபாடு ஒரு பாலமாக இருக்குமே தவிர தெய்வ வழிபாடு செய்தாலே எல்லாம் கிடைக்கும் என்பது முட்டாள்தனமான எண்ணமாகும்.

தெய்வத்தை எந்த அளவுக்கு நம்பி வழிபாடு செய்கிறோமோ அதே அளவுக்கு அந்த வேலைக்கு உண்டான முயற்சியையும் அந்த வேலைக்கு உண்டான திறமையையும் நாமே ஏற்படுத்திக் கொள்வது மிகவும் அவசியமானதாகும்.
தெய்வவழிபாடு ஒரு தண்டவாளம் என்றால் முயற்சியும்,திறமையை வளர்த்துக் கொள்வதும் மற்றொரு தண்டவாளம் ஆகும். இரண்டு தண்டவாளங்கள் ஒன்றாக சேர்ந்தால் தான் அதில் ரயில் பயணம் செய்ய முடியும் அது போன்று தான் இதுவும்.

நல்ல மற்றும் நிரந்தரமான வேலை கிடைக்க எந்தெந்த தெய்வங்களை வணங்க வேண்டும்?

1.முதலில் எந்த ஒரு காரியத்தை தொடங்கும் போதும் நம் குல தெய்வ வழிபாடு என்பது மிக மிக அவசியமாகும்.ஏனெனில் நம் குலதெய்வம் அனுகிரகம் செய்தால் மட்டுமே மற்ற தெய்வங்கள் நமக்கு அருள் செய்யும்,எனவே அந்தந்த குலதெய்வத்திற்கு ஏற்ப வழிபாடுகளை நாம் செய்வது மிகவும் அவசியமாகும்.

2.அனுமாரை வழங்கினால் நமக்கு நிரந்தரமான வேலை கிட்டும்.கொடுத்த வாக்கை காப்பாற்றும் சொல் தவறாதவர் அனுமன்,எனவே அவரை வணங்கி வருகையில் எளிதில் வேலை கிட்டும்.

3.காலபைரவரை நாம் வணங்கும் பொழுது நமக்கு அரசாங்க வேலை கிட்டும்

4.சனிக்கிழமை அன்று சனிபகவானை நாம் வணங்கி வந்தால் தேடிச்செல்லும் வேலை நம் கை வசப்படும்.ஏனெனில் நம் எண்ணத்தையும் நம் சொல்லையும்
ஒழுங்குபடுத்துபவர் சனி பகவானே,நம் வேலைக்காக அவரிடம் மனமுருகி வேண்டும் பொழுது நமது சொல்லையும் செயலையும் தெளிவுபடுத்தி விரைவில் வேலைக்கிட்ட அருள் செய்வார்.