‘ஆடி தவசு’ ‘ஆடிப்பெருக்கு’ இன்றைய நாளில் செய்யும் வழிபாட்டு முறை!!இன்று மாங்கல்யம் மாற்ற மிக மிக உகந்த நாள்!!

0
209

இந்த வருடம் ஆடிப்பெருக்கு மற்றும் ஆடி தவசு ஆகிய இரு தினங்களும் இன்று ஒரே நாளில் வருவதால் இந்த வருட ஆடி18 மிக மிக சிறப்பு வாய்ந்ததாகும்.

ஆடி தவசு
ஆடி தவசு என்பது அம்மாள் ஊசி முனையின் மீது நின்று தவம் செய்து சங்கரநாராயணன் திரு உருவத்தை பார்த்த நாள் ஆகும்.இந்த நாளில் நாம் இறைவனை ஒருமனதோடு நினைத்து வழிபட்டால் சிவபெருமானே அருள் தந்து காட்சியளிப்பார்.

ஆடிப்பெருக்கு

இந்த ஆடிப்பெருக்கு நம் உயிர் நாடியாக விளங்கும் தண்ணீரை வணங்கும் விதமாக கொண்டாடப்படுகிறது.ஆற்றங்கரையில் பல்வேறு உணவுகள் படைத்து காவிரி தாயை நினைத்து எப்பொழுதும் விவசாயம் செழிக்க கரைபுரண்டு வருவாயாக என்று மனதார வழிபடுவோம்.ஆடிப்பெருக்கு நாளில் சிவபெருமானே காவிரி தாய்க்கு சீர் கொண்டு வருவார் என்னும் கூற்று இருக்கின்றது.அப்படிபட்ட இந்த நாளில் தற்போது நாம் ஆற்றங்கரைக்கு சென்று வழிபடும் நிலையில் இல்லை.எனவே வீட்டில் இருந்து காவிரி தாயை எவ்வாறு பூஜிப்பது என்பதனைப் பற்றி விரிவாக காண்போம்.

உங்கள் வீட்டின் பூஜை அறையில் நிறைச் சொம்பு தண்ணீர் வைத்து சிறிது மஞ்சள் தூளையும் துளசியும் அதில் போட்டு பல்வேறு வகையான உணவுகளையும் பழங்களையும் மற்றும் காப்பரிசி(வெல்லம் கடலை பச்சரிசி மாவு தேங்காய் கலந்த கலவை) விருந்தாக வைத்து நாம் உயிர் வாழ ஆதாரமாக விளங்கும் தாயை நினைத்து மனதார பூஜை செய்தால் நம் வீட்டில் அனைத்து செல்வங்களும் பெருகும்.

ஆடி பதினெட்டு அன்று தாலி கயிறு மாற்றுவதால் ஏற்படும் நன்மைகள்?


மற்ற நாட்களை விட இந்த ஆடிப்பெருக்கு அன்று நாம் தாலிக்கயிறை மாற்றினால் நம் மாங்கலிய பாக்கியம் மிகமிக பெருகும்.மேலே செய்யக்கூடிய பூஜையுடன் நம் மாங்கல்லியத்தையும் வைத்து (வேறொரு மஞ்சள் கயிறை கழுத்தில் கட்டிக்கொண்டு மாங்கல்ய கயிறை கழட்டி தண்ணீரில் சுத்தம் செய்ய வேண்டும்) சுத்தம் செய்த இந்த மாங்கல்யத்தில் மஞ்சள் குங்குமம் வைத்து தண்ணீர் பெருகுவது போல என் மாங்கல்ய பாக்கியமும் பெருகி நிலைத்திருக்க வேண்டும் என்று அம்மாளை வணங்க வேண்டும்.பின்னர் இந்த தாலிக்கயிற்றினை
அவரவர்களின் கணவர் இடத்திலோ அல்லது சுமங்கலி பெண்ணிடத்திலோ கொடுத்து அதனை கட்டிவிடச் சொல்லவேண்டும்.

ஆடிப்பெருக்கன்று என்னென்ன பொருட்கள் வாங்க வேண்டும்

இந்த ஆடிப்பெருக்கன்று அனைத்துவிதமான நல்ல காரியங்களையும் செய்ய மிகவும் உகந்த நாளாகும்.இந்த நாளில் எது வாங்கினாலும் அது பன்மடங்கு பெருகும்.தற்போது இருக்கும் சூழ்நிலையில் பெரிதாக எதுவும் வாங்க முடியாது என்றால் அரிசி,பருப்பு வெல்லம்,உப்பு ,மஞ்சள் ஆகிய இந்த ஐந்து பொருட்களை வாங்கி வைத்து பூஜை செய்தால் நம் வீட்டில் சகல செல்வமும் பெருகும்.

Previous articleஆடி பெருக்கன்று தாலி கயிறை மாற்றுவதால் இவ்வளவு நன்மையா?
Next articleசீயான் விக்ரம் தான் எனக்கு கோச்: மனம் திறந்த பிரபல நடிகர்!