காரியத்தடையை நீக்கும் வெற்றிலை மாலை…!!

Photo of author

By Pavithra

ஆஞ்சநேயரை வழிபட்டால் மனதில் உள்ள பயங்கள் காணாமல்போகும் என்றும், அதே போன்று காரியத்தடைகள் நீங்கும் என்றும் கூறுவார்கள்.ஆஞ்சநேயருக்கு உகந்த மாலை துளசி மாலை, வடைமாலை, மற்றும் வெற்றிலை மாலை ஆகும்.

நாம் ரொம்ப நாட்களாக ஒரு காரியத்தை எதிர்பார்த்து இருப்பின் அது வெற்றி பெற அந்த செயலை ஒரு பேப்பரில் 108 முறை எழுதி மாலையாக தொடுத்து அனுமனுக்கு சூட்டி நம்வழி படுகையில் அந்த காரியம் வெற்றி பெறும் என்பது அனைவரும் அறிந்ததே.

ஆனால் வெற்றிலை மாலையை சூட்டி அனுமனை வழிபட்டு வந்தால் அனுமன் மனம் குளிர்ந்து எடுத்த காரியம் வெற்றி பெறும் என்பது எத்தனை பேருக்கு தெரியும்?

ஆம் ராவணனோடு யுத்தம் செய்த ராமர் முடிவில் வெற்றி பெற்றார்.இந்த செய்தியை அசோகவனத்தில் இருக்கும் சீதைக்குத் அனுமன் சென்று கூறினார். அந்தச்செய்தி சீதையின் காதில் தேனாகப் பாய்ந்தது. சீதை மகிழ்ச்சிப் பெருக்கில் அவருக்கு பரிசளிக்க விரும்பி சீதை அமர்ந்திருந்த இடத்தில் வெற்றிலைக் கொடியில் படர்ந்திருந்த வெற்றிலையை பறித்து மாலையாக தொடுத்து அனுமனிடம் இது உனக்கு நான் தரும் பரிசு ஏற்றுக் கொள் என்று கூறினார்கள்.தன் தாயார் தந்த பரிசை மன மகிழ்வுடன் ஏற்றுக்கொண்டார் அனுமன்.

இதை தொடர்ந்து அவருக்கு வெற்றிலை மாலை சூடும் வழக்கம் வந்தது.மேலும் வெற்றிலை மாலையை சூட்டி அவரை வழிபட்டால் அவர் மிகவும் மனம் குளிர்ந்து நம் காரிய தடைகளை தீர்த்து வைப்பார் என்று ஐதீகம்.