அனைத்து பிரச்சனைகளையும் தீர்க்கும் தேய்பிறை அஷ்டமி காலபைரவர் வழிபாடு:! வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே இந்த நாள்வரும்!

Photo of author

By Pavithra

அஷ்ட பைரவர்களின் காலபைரவர் நம்முடைய அனைத்து பிரச்சனைகளையும் தீர்க்கக்கூடிய அவதாரமாக இருக்கின்றார்.பொதுவாகவே காலபைரவரை வழிபட தேய்பிறை அஷ்டமி,செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை ஆகிய நாட்கள் மிகவும் உகந்ததாகும்.நாளை செவ்வாய்க்கிழமை நாளன்று
தேய்பிறை அஷ்டமி வருவதால் கால பைரவருக்கு மிக மிக மிக உகந்த நாளாகும்.இந்நாளில் அவருக்கு செவ்வரளி மாலையிட்டு காரமான புளி சாதம் செய்து,வடை மாலை இட்டு, விரதமிருந்து அவரை வணங்கி வந்தால் அனைத்து விதமான பிரச்சினைகளையும் தீர்த்து வைப்பர்.

நாளை செவ்வாய்க்கிழமை நாளன்று வரும் தேய்பிறை அஷ்டமியில் கால பைரவரை வழிபடுவதால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதனை பார்ப்போம்?

1.கடன் தொல்லை நீங்கும்.

2.அஷ்டமத்துச் சனி பாதசனி ஜென்ம சனி போன்ற சனிபகவானின் கஷ்டங்களில் இருந்து நம்மை நீக்கும்.

3.குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும்.

4.பில்லி சூனியம் ஏவல் போன்ற பிரச்சனைகள் நீங்கும்.

5.சொத்துப் பிரச்சினை தீரும்.

6.கோர்ட்டு பிரச்சினைகள்,அரசியலில் ஏற்படும் பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும்.

7.செல்வம் பெருகும்.திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் பாக்கியம் கிட்டும்.

8.விரைவில் நல்ல வேலை கிடைக்கும்.