அந்த மாயக்கண்ணனை மயக்க இப்படி பூஜை செய்யுங்கள்!

Photo of author

By Pavithra

விஷ்ணு பெருமான் கிருஷ்ணராக அவதாரமெடுத்த நாளை,நாம் கோகுலாஷ்டமி,கிருஷ்ண ஜெயந்தி என்று பல்வேறு பெயர்களில் அழைக்கின்றோம்.”விஷ்ணு பெருமான் கிருஷ்ணராக ஆவணி மாதம் அஷ்டமி திதியில் ரோகிணி நட்சத்திரத்தில் ” அவதாரம் எடுத்தார்.இன்று
ஜென்மாஷ்டமியான இன்று வடமாநிலத்தவர்கள் கோகுலாஷ்டமியை பெரிதும் கொண்டாடுவார்கள்.
தென்னிந்தியர்கள் கிருஷ்ணர் அவதாரம் எடுத்த அஷ்டமிதிதி ரோகிணி நட்சத்திரத்தில் கோகுலாஷ்டமி விரதம் கடைப்பிடிப்பர்.இந்த இரண்டு நாட்களுமே அந்த மாயக் கண்ணனுக்கு விரதமிருந்து பூஜை செய்யலாம்.

பூஜை செய்வதற்கான நல்ல நேரம்:

இன்று காலை 7.56 முதல் மறுநாள் காலை 9.36 வரை அஷ்டமி திதி உள்ளது.
கிருஷ்ண பகவானை வழிபட காலை 10.35 முதல் 11.30 வரையும், மாலை 6 மணிக்கு மேல் கிருஷ்ணாபரமானை
வழிபடலாம்.பொதுவாக கண்ணனுக்கு மாலை நேரத்தில் பூஜை செய்வது மிகவும் உகந்ததாகும்.

மாயக் கண்ணனை பூஜை செய்யும் வழிமுறை:!

மேலே குறிப்பிட்ட நல்ல நேரத்தில் பாலால் ஆன அனைத்து பொருட்களும்,முறுக்கு சீடை போன்றவற்றையும் நெய்வைத்தியமாக படைத்து,கடந்த வருடம் குழந்தை வேண்டி குழந்தை பாக்கியம் கிடைத்தவர்களுக்கு,அந்தக் குழந்தையின் பாதத்தை பதித்து ஆண் குழந்தையாக இருந்தால் கிருஷ்ணராக அலங்கரித்து,பெண் குழந்தையாக இருந்தால் ராதையாக அலங்கரித்து பூஜை செய்து நாம் அந்த மாயக் கண்ணனுக்கு நன்றி செலுத்த வேண்டும்.

குழந்தை பாக்கியம் வேண்டி பூஜை செய்பவர்கள் காலை எழுந்தவுடன் கணவன் மனைவி இருவருமே நீராடி உணவு உண்ணாமல் கிருஷ்ணருக்கு உகந்த பாலால் ஆன அனைத்து பொருட்களையும்,அவர்களால் முடிந்த முறுக்கு சீடை இது போன்ற பொருட்களையும்
நெய்வைத்தியமாக படைத்து பூஜை செய்து,கிருஷ்ணரின் கால்தடத்தை பதித்து,கிருஷ்ணரே தவழ்ந்து வருவது போல் நினைத்து மனமுருகி அடுத்த வருடம் உன்னைப் போன்றே எங்களுக்கு ஒரு குழந்தை கிடைக்க வேண்டுமென்று மனதார வழிபட வேண்டும்.குழந்தை பாக்கியம் வேண்டி விரதம் இருக்கும் அனைவருக்கும் கோகுலாஷ்டமி நல்வாழ்த்துக்கள்.அடுத்த வருடம் உங்கள் கையிலும் ஒரு குழந்தை தவல எங்கள் வாழ்த்துக்கள்.