இன்று கடைசி ஆடி வெள்ளி:! அம்பாளை இப்படி வழிபட்டால் தீராத கஷ்டங்களும் தீரும்!

Photo of author

By Pavithra

ஆடி மாதம் என்றாலே அம்மனுக்கு மிகவும் உகந்த மாதமாகும்.அதுவும் ஆடி வெள்ளி என்றால் சொல்ல வேண்டியதே இல்லை அம்மனுக்கு மிகவும் உகந்த நாளாகும்.இன்று கடைசி ஆடி வெள்ளி என்பதால் அம்மனுக்கு இது போன்று பூஜை செய்தால் உங்கள் வீட்டில் பரிபூரணமாக அந்த அம்மாள் குடிபுகுவாள்.

ஆடி வெள்ளிக்கிழமை அன்று வீட்டின் அருகில் வேப்பமரம் உள்ளவர்கள் வேப்ப மரத்திற்கு மஞ்சள் குங்குமம் இட்டு விளக்கு வைத்து, நெய்வைத்தியம் படைத்து வழிபடலாம்.

வீட்டின் முன்பு வேப்பமரம் இல்லாதவர்கள் ஒரு சிறிய வேப்பம்
கொத்தையை உடைத்து வந்து, செம்பு அல்லது வெள்ளி சொம்பில் மஞ்சள் குங்குமம் இட்டு சொம்பு முழுவதும் தண்ணிர் நிரப்பி அந்தத் தண்ணீரில் மஞ்சள் கலந்து அதனுள் ஒரு எலுமிச்சை பழத்தை போட்டு பின்பு நம் பறித்து வந்த வேப்பிலையை சொம்பினுள் வைக்கவேண்டும்.
அதாவது கலசம் போல் செய்ய வேண்டும்.

இவ்வாறு கலசத்தை செய்து,நம் வசதிக்கேற்ப ஐந்து வகை அல்லது மூன்று வகை சாதங்களை செய்ய வேண்டும் அதாவது (எலுமிச்சை சாதம்,தயிர் சாதம், புளி சாதம்,சர்க்கரை பொங்கல்) இதுபோன்ற உணவுகளை செய்து அம்மனுக்கு இலையில் இட்டு, இளநீர் வைத்து
தீபாரணை காட்டி அந்த கலசத்தினுள் அம்மனே குடி புகுந்துள்ளதாக நினைத்து நம் முன்னோர்களையும் சேர்த்து,வழிபட்டுமேயானால் அந்த அம்மாளின் அருளும் பெரியோர்களின் ஆசியும் நமக்கு பரிபூரணமாக கிடைக்கும்.

இவ்வாறு மனதார வழிபட்ட பின்பு அம்மனுக்கு படைத்த அந்த சாதத்தை முகம் தெரியாதவர்களுக்கு பிரசாதமாக வழங்கி பின்பு நாமும் அதை மனதார சாப்பிட வேண்டும்.ஆனால் “பூஜைக்கு வைத்த இளநீரை நாம் சாப்பிடக்கூடாது” அதனை செடி அல்லது மரத்தின் அடியில் ஊற்றி விட வேண்டும்.பின்பு எலுமிச்சை கனியை எடுத்து நம் வீட்டில் வைத்து விட்டு வேப்பிலையை வேப்பமரத்தின் அடியில் கால்மிதி படாதவாறு போட்டு விட்டு அந்த தண்ணீரை செடியின் அடியில் ஊற்றி விட வேண்டும்.இந்த எலுமிச்சை பழத்தை உங்கள் பணமிருக்கும் பெட்டியில் வைத்து விடுங்கள் செல்வம் பெருகும்.அம்பாளை ஆடி வெள்ளிக்கிழமை அன்று இந்த முறையில் வழிபட்டால் உங்கள் வீட்டினுள் பரிபூரணமாக குடிபுகுந்து தீராத கஷ்டத்தையும் தீர்த்து வைப்பாள்.