அரசன் போன்ற வாழ்வை அமைத்துத் தரும் அரச மர வழிபாடு..!! எந்த கிழமைகளில் சுற்றினால் என்ன பலன் கிடைக்கும்..??

Photo of author

By Janani

அரசன் போன்ற வாழ்வை அமைத்துத் தரும் அரச மர வழிபாடு..!! எந்த கிழமைகளில் சுற்றினால் என்ன பலன் கிடைக்கும்..??

Janani

பொதுவாக அரச மர வழிபாடு என்பது மிகவும் உயர்ந்த ஒரு வழிபாடு ஆகும். குறிப்பாக மார்கழி மாதத்தில் இந்த அரச மரத்தினை நாம் வழிபட்டு வந்தால் பல நன்மைகள் நமது வாழ்க்கையில் உண்டாகும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யார் வேண்டுமானாலும், இந்த அரச மரத்தை பிரம்ம முகூர்த்த நேரத்தில் ஒரு குடம் தண்ணீர் ஊற்றி, அரச மரத்தை சுற்றி வந்து வழிபட்டு வந்தோம் என்றால், நமது வாழ்க்கையில் நிச்சயம் பல மாற்றங்களை காண முடியும்.

குழந்தைகளுக்கு நல்ல புத்தி கூர்மை, பெண்களுக்கு நல்ல உடல் ஆரோக்கியம், ஆண்களுக்கு நல்ல மன ஆரோக்கியம் இவை அனைத்தும் இந்த அரச மர வழிபாட்டின் மூலம் நமக்கு கிடைக்கும். இவ்வாறு ஆன்மீகம் ரீதியாக மட்டுமல்லாமல், மருத்துவம் ரீதியாகவும் நிறைய ஆக்சிஜனை வெளியிடக்கூடிய மரமாகவும் இந்த அரச மரம் திகழ்கிறது.

இந்த அரச மரத்திற்கு ராஜ விருட்சம் என்ற இன்னொரு பெயரும் உண்டு. இந்த மரத்தில் முப்பெரும் தேவர்களும் வாசம் செய்வதாக கூறப்படுகிறது. அதாவது இந்த அரச மரத்தின் அடிப்பகுதியில் பிரம்மாவும், நடுப்பகுதியில் மகாவிஷ்ணுவும், மேல் பகுதியில் பரமேஸ்வரனும் வாசம் செய்வதாக கூறப்படுகிறது.

இந்த அரச மரத்தில் முப்பெரும் தேவர்களும் இருப்பதால், முப்பெரும் தேவிகளும் இந்த அரச மரத்தில் குடிகொண்டு இருக்கிறார்கள். எனவே அனைத்து வித தெய்வங்களின் ரூபமாகவும் இந்த அரசமரம் திகழ்கிறது. இந்த அரச மரத்தின் அடியில் தான் விநாயகர் அமர்ந்திருக்கிறார் என்பதால், இந்த அரச மரத்திற்கு கூடுதல் சிறப்பும் உண்டு.

பல வேள்விகளை செய்வதற்கும் இந்த அரச மர குச்சிகள் தான் பயன்படுகிறது. எனவே அனைத்து விதமான நலன்களையும் தரக்கூடிய ஆற்றல் மற்றும் பல அற்புதங்கள் நிறைந்த அதிசய மரம் என்றால் இந்த அரச மரம் தான்.

இந்த மரத்தை சுற்றி வந்து நாம் வழிபாடு செய்யும்பொழுது அந்த மரத்திலிருந்து நமக்கு கிடைக்கக்கூடிய ஆக்சிஜன் நமது மூளையை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ள உதவுகிறது. நமது உடல் இயக்கத்தை சரியாக வைத்துக் கொள்ள உதவுகிறது. பெண்களுக்கு ஏற்படக்கூடிய கர்ப்பப்பை கோளாறுகளையும் இது சரி செய்யும்.

ஆண்களுக்கு தேவையான நல்ல உடல் ஆரோக்கியத்தையும், மன ஆரோக்கியத்தையும் இந்த மரம் கொடுக்கிறது. இத்தகைய சிறப்புகள் வாய்ந்த இந்த அரச மரத்தை எந்தெந்த கிழமைகளில் வழிபட்டால், என்னென்ன பலன் கிடைக்கும் என்பதையும் நாம் தெரிந்து கொள்ளலாம்.

திங்கள்- சகல சௌபாக்கியம்
செவ்வாய்-காரிய சித்தி/ பதவி உயர்வு
புதன் -வியாபாரம்/ லாபம் பெருகும்
வியாழன்-கல்வி/ ஞானம்/ அறிவு.
வெள்ளி-கடன் நீங்கும்
சனி -நோய்கள் நீங்கும்
ஞாயிறு-குடும்ப பிரச்சினை தீரும்

அதேபோன்று திங்கள்கிழமை இந்த அரச மரத்தை வழிபடும் பொழுது சிவபெருமானின் அருளும், செவ்வாய்க்கிழமை வழிபடும் பொழுது துர்கா தேவியின் அருளும், புதன்கிழமை வழிபடும் பொழுது முப்பத்து முக்கோடி தேவர்களின் அருளும், வியாழன் கிழமை வழிபடும் பொழுது தட்சணா மூர்த்தியின் அருளும், வெள்ளிக் கிழமை வழிபடும் பொழுது மகாலட்சுமியின் அருளும், சனிக்கிழமை வழிபடும் பொழுது நவகிரகத்தின் அருளும் மகாலட்சுமியின் அருளும், ஞாயிற்றுக்கிழமை வழிபடும் பொழுது சூரிய பகவானின் அருளும் நமக்கு பரிபூரணமாக கிடைக்கும்.

இதேபோன்று அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களிலும் இந்த அரச மரத்தை சுற்றி வந்து வழிபாடு செய்யலாம். அமாவாசை நாட்களில் இந்த அரச மரத்தை வழிபடும் பொழுது நீண்ட நாட்களாக இருந்த தீராத கடன்களும் தீரும், திருமண தடைகள் போன்ற எந்த வித தடைகளாக இருந்தாலும் நீங்கும்.

இந்த அரச மரத்தை குழந்தைகள், ஆண்கள், பெண்கள் என அனைவரும் சுற்றி வழிபாடு செய்யலாம். 11 முறை, 15 முறை, 54 முறை 108 முறை இது போன்று நம்மால் எத்தனை முறைகள் சுற்ற முடியுமோ, அத்தனை முறை சுற்றி வழிபட்டுக் கொள்ளலாம்.

இந்த அரச மரத்தை காலை நேரங்களில் சுற்றி வழிபடுவது என்பது சிறப்பானதாக அமையும். ஆனால் மதியம் 12 மணிக்கு பிறகு அரச மரத்தை சுற்றி வழிபாடு செய்யக்கூடாது. வேண்டும் என்றால் அரச மரத்திற்கு முன்பாக நின்று வணங்கிக் கொள்ளலாம், ஆனால் சுற்றி வழிபாடு செய்யக்கூடாது. எனவே காலை நேரத்தில் மட்டுமே அரச மரத்தை சுற்றி வழிபாடு செய்வது சிறப்பானதாக அமையும்.

இந்த அரச மரத்திற்கு தண்ணீர் ஊற்றி நாம் தினமும் வழிபட்டு வந்தோம் என்றால், நமது வாழ்க்கையில் பல வெற்றிகளையும், ராஜ யோக மரியாதை என்பதையும் நாம் கண்டிப்பாக பெற முடியும்.