உங்கள் வீட்டில் எவ்வளவு பணம் வந்தாலும் தங்கவில்லை என்று கவலைப்படுபவர்களா நீங்கள்:?அப்போ இதை மட்டும் செய்து பாருங்கள்!!!

0
205

பொதுவாகவே அனைவரின் வீட்டிலும் வருகின்ற பணத்தை விட செலவு அதிகமாக இருக்கிறது,என்றும் பணம் வருவதும் தெரியவில்லை செலவாகுவதும் தெரியவில்லை என்றும் புலம்பும் வீடுகள் நிறைய இருக்கும்.இந்த பிரச்சனைகளை நீக்க உங்கள் வீட்டிலோ அல்லது வேலை செய்யும் இடத்திலோ இந்த மாதிரி விளக்கை ஏற்றி வையுங்கள் அந்த மகாலட்சுமியின் அருள் உங்களுக்கு முழுமையாக கிடைக்க பெற்று வீட்டில் செல்வம் சேரும்.

அது என்ன விளக்கு எப்படி ஏற்றுவது?

உப்பு விளக்கு ஏற்றி தினமும் பூஜை செய்தால் நம் வீட்டில் பணம் எப்பொழுதும் தங்கும்.

ஒரு பித்தளை தட்டு அல்லது வெள்ளி அல்லது செம்பு தட்டை எடுத்து அதில் மஞ்சள் குங்குமம் இட்டு மண்ணால் ஆன ஒரு அகலை எடுத்துக் கொள்ள வேண்டும்.அந்த ஆகலின் உட்புறம் மஞ்சள் தடவி குங்குமம் இட்டு அதில் கல்உப்பு வாங்கி சிந்தாமல் சிதறாமல் மெதுவாக கொட்ட வேண்டும்.பின்பு சிறிதளவு குங்குமத்தையும் மஞ்சள் தூளையும் தூவி விட்டு

மண்பாண்ட அகல்

அதன் மீது ஒரு சிறிய மண் விளக்கை வைக்க வேண்டும். அந்த மண் விளக்கில் அர்ச்சனை அரிசி அதாவது மஞ்சள்த்தூளும் பச்சரிசியையும் கலந்த கலவை சிறிதளவு வைத்து அதன் மீது மற்றொரு மண் விளக்கு வைத்து எண்ணெய் ஊற்றி திரி போட்டு கொள்ள வேண்டும்.

பின்பு அந்த விளக்கை சுற்றி பூவினால் அலங்காரம் செய்ய வேண்டும் அதன்பிறகு இந்த விளக்கை காலை சூரியன் உதயமாகும் முன்பும் மாலை சூரியன் மறைந்த பின்பும் ஏற்றிவைத்து வழிபட வேண்டும்.
இந்த விளக்கை பெண்கள் ஏற்றினால் மிகமிக நற்பயன்களை தர வல்லதாகும்.ஒருவேளை வியாபார இடத்தில் பெண்கள் ஏற்ற முடியாத சூழல் ஏற்பட்டால் ஆண்கள் ஏற்றி கொள்ளலாம்.

இந்த விளக்கில் கொட்டி வைத்த உப்பை எப்பொழுதும் மாற்றுவது?

பொதுவாக இந்த விளக்கை வெள்ளிக்கிழமை நாளன்று ஏத்த தொடங்கினால் அடுத்த வியாழக்கிழமை அன்று அந்த உப்புக் கல்லை எடுத்து நீர்நிலைகளில் கொட்டி விட்டு மறுபடியும் சுத்தம் செய்து,வெள்ளிக்கிழமை அன்று இதுபோல் விளக்கேற்ற வேண்டும்.

இதுபோன்று நீங்கள் தொடர்ந்து விளக்கேற்றி வைத்து அந்த மகாலட்சுமி தாயே மனமுருகி வழிபட்டு வந்தால் உங்கள் வீட்டில் மகாலட்சுமி அருள் முழுமையாகக் கிடைக்கப் பெற்ற செல்வத்தை அள்ளி கொடுப்பாள்.

Previous articleசச்சினுடன் களமிறங்கும் வாய்ப்பு எனக்கு அமையவில்லை – ரோகித் சர்மா வருத்தம்
Next articleஆகஸ்ட் 20 அன்று வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்! காரணம்?