வங்கக் கடலில் உருவாகி இருக்கின்ற காற்றழுத்த தாழ்வு பகுதியானது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருமாறி இதைத்தொடர்ந்து இன்று அது புயலாக வலுப்பெற்று வருகிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்து இருக்கிறது இந்த புயலுக்கு என்று பெயரிடப்பட்டு இருக்கிறது என்று தெரிவிக்கப்படுகிறது.
மேலும் இந்த புயலானது மேற்குவங்கம் மற்றும் வடக்கு ஒடிசா பகுதிகளில் 155 முதல் 165 கிலோமீட்டர் வரை காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆகவே அடுத்துவரும் நான்கு நாட்களுக்கு மீனவர்கள் இலங்கை கடல் பகுதியில் மீன் பிடிப்பதற்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இந்தப் புயல் காரணமாக தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் அதேபோல மேற்கு தொடர்ச்சி மலையை சார்ந்த மாவட்டங்களான சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், ராணிப்பேட்டை மற்றும் திருப்பூர் போன்ற மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
அத்துடன் இந்த புயல் காரணமாக, பேரிடர் மேலாண்மை துறையினர் தயார் நிலையில் இருந்து வருகிறார்கள். வாரணாசி மற்றும் கொல்கத்தாவில் மீட்பு படையினர் தயார் நிலையில் இருக்கிறார்கள். கொல்கத்தா அரக்கோணம் முதல் வரையிலும் மீட்பு ஏற்பாடுகள் தயார் நிலையில் இருந்து வருகிறது என தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் இந்த நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளில் விமானப்படைகள் களமிறங்கி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. நிவாரண பொருட்கள் மீட்பு பணி தளவாடங்கள் அனுப்பி வைக்கப்பட்டு இருக்கின்றன.606 மீட்புப்படை வீரர்கள் கல்கத்தா மற்றும் அந்தமான் பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறார்கள்.