ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீராங்கனைகள் ஏமாற்றம்!

Photo of author

By Sakthi

டோக்கியோ ஒலிம்பிக் பெண்கள் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் துப்பாக்கி சுடுதல் போட்டி இந்திய நேரப்படி நேற்று காலை ஐந்து முப்பது மணி அளவில் ஆரம்பமானது. இந்தியாவின் சார்பாக யாஷஸ்வினி தேஸ்வால், மனு பாகர் உள்ளிட்டோர் பங்கேற்றார்கள். மொத்தம் ஆறு தொடர் ஒரு தொடருக்கு 10 சுடுதல் என மொத்தமாக 60 முறை சுடவேண்டும். ஒருமுறை இலக்கை துல்லியமாக கணித்து சுட்டு விட்டால் 11 புள்ளிகள் கிடைக்கும். யாஷஸ்வினி 1 முதல் 6 தொடர்களில் 94, 98, 94, 97, 96, 95, உள்ளிட்ட புள்ளிகளை பெற்றார். இவர் பெற்ற மொத்த புள்ளிகள் 574 என்று சொல்லப்படுகிறது. இந்தப் புள்ளிகள் அவரை இறுதிப்போட்டிக்கு அழைத்துச் செல்லவில்லை என்று சொல்லப்படுகிறது. இதன் காரணமாக, அவர் 13வது இடத்தை பிடித்திருக்கிறார்.

அதேபோல மானு பாகர் ஒன்று முதல் ஆறு தொடர்களில் 98, 95, 94, 98, 95, 95, உள்ளிட்ட புள்ளிகளை பெற்றார். இவர் பெற்ற மொத்த புள்ளிகள் 575 என்று சொல்லப்படுகிறது. ஆகவே இவர் 12-ஆம் இடத்தை பிடித்திருக்கிறார். முதல் எட்டு வீராங்கனைகள் மட்டுமே இறுதிப் போட்டிக்கு முன்னேற இயலும் என்ற காரணத்தால், இருவரும் இறுதிப் போட்டிக்கான வாய்ப்பை இழந்து விட்டார்கள். சீன வீராங்கனைகள் முதலிடமும் கிரீஸ் வீராங்கனை இரண்டாவது இடமும் ரஷ்ய வீராங்கனை மூன்றாவது இடமும் பிடித்தார்கள்