நேற்று நடந்த ஐபிஎல் போட்டி!! சாதனை படைத்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்!!

Photo of author

By Sakthi

நேற்று நடந்த ஐபிஎல் போட்டி!! சாதனை படைத்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்!!

Sakthi

Yesterday's IPL match!! Chennai Super Kings team player with a record!!
நேற்று நடந்த ஐபிஎல் போட்டி!! சாதனை படைத்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்!!
நேற்று நடந்த சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சேர்ந்த அம்பத்தி ராயுடு அவர்கள் புதிய சாதனையை படைத்துள்ளார்.
நேற்று டெல்லி கேபிடல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து இந்த போட்டியில் சென்னை அணியை சேர்ந்த அம்பத்தி ராயுடு அவர்கள் புதிய சாதனையை படைத்துள்ளார்.
டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் அம்பத்தி ராயுடு அவர்கள் விளையாடியதன் மூலம் தனது 200வது ஐபிஎல் போட்டியில் விளையாடியுள்ளார். ஐபிஎல் தொடரில் 200வது ஆட்டத்தை விளையாடிய 9வது வீரராக அம்பத்தி ராயுடு அவர்கள் சாதனை படைத்துள்ளார். மகேந்திர சிங் தோனி, தினேஷ் கார்த்திக், ரோஹித் சர்மா, விராட் கோஹ்லி, ரவீந்த்ர ஜடேஜா, ஷிகர் தவான், சுரேஷ் ரெய்னா, ராபின் உத்தப்பா அவர்களை தொடர்ந்து 9வது வீரராக அந்த பட்டியலில் அம்பத்தி ராயுடு அவர்கள் இடம் பிடித்துள்ளார்.