கோலிவுட்டில் இப்போது அதிக படங்களில் காமெடி நடிகராக நடிப்பவர் யோகிபாபு. சில படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார். இவர் 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான லொள்ளு சபா படப்பிடிப்பிற்கு நண்பருடன் சென்றிருந்தபோது யோகிபாபு வை முதல் முதலில் இயக்குனர் ராம் பாலம் கண்டறிந்தார். யோகி பாபுவின் தனித்துவம், தோற்றம் மற்றும் உடல் அமைப்பு இயக்குனர் ராம் பாலாவை ஈர்த்தது. லொள்ளு சபாவின் சில நிகழ்ச்சிகளில் கும்பலில் நிற்கும் வேடத்திலும் இவர் நடித்திருக்கிறார்.
தமிழ் சினிமாவில் இப்போது காமெடி நடிகர் என யாருமில்லை. ஏனெனில், வடிவேலு ஏறக்குறைய ஃபீல்ட் அவுட் ஆகிவிட்டார். சந்தானமும், சூரியும் இனிமேல் ஹீரோவாக மட்டுமே நடிப்பார்கள் எனத்தெரிகிறது. எனவேதான், கிடைத்த இடைவெளியை யோகிபாபு பிடித்துக்கொண்டார். அவரின் காமெடி ரசிகர்களுக்கு சிரிப்பை வரவழைப்பது இல்லை என்றாலும் அவரை விட்டால் வேறு வழியில்லை என்கிற நிலைதான் இப்போது இருக்கிறது.
இந்நிலையில், கஜானா என்கிற படத்தில் யோகிபாபு நடித்திருக்கிறார். இந்த இசை மற்றும் டிரெய்லர் வெளியிட்டு விழா நேற்று சென்னை பிரசாத் ஸ்டுடியோவில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் யோகிபாபு கலந்துகொள்ளவில்லை. நிகழ்ச்சியில் கலந்துகொள்ள 7 லட்சம் பணம் கேட்டதால் அவர் வரவில்லை ராஜா என்கிற தயாரிப்பாளர் அந்த விழாவில் பேசியிருந்தார். ‘காசு கொடுத்தாதான் புரமோஷன் நிகழ்ச்சிக்கு நீ வருவியா?. நடிகனா இருக்கவே உனக்கு தகுதி இல்லையே’ என கோபத்துடன் பேசியிருந்தார்.
இதுபற்றி யோகிபாபு தரப்பில் கொடுக்கப்பட்ட விளக்கத்தில் ‘அப்படி பேசியவர் யாரென்றே எங்களுக்கு தெரியாது. யோகிபாபு அப்படி எதுவும் சொல்லவில்லை’ என சொல்லியிருந்தனர். அதேபோல், அப்படி பேசியவருக்கும் கஜானா படக்குழுவிற்கும் சம்பந்தம் இல்லை என அப்படத்தின் இயக்குனரும் கூறியிருக்கிறார்.