பட்டாவில் பெயர் நீக்கம் மற்றும் சேர்த்தல் இவ்வளவு சுலபமா… உடனே விண்ணப்பியுங்கள்!!

0
6
you-can-apply-immediately-for-name-change-and-deletion-in-the-patta-through-eservice
you-can-apply-immediately-for-name-change-and-deletion-in-the-patta-through-eservice

தமிழக அரசு முன்கூட்டியே பட்டாவில் பெயர் நீக்கம், சேர்த்தல் ஆகியவற்றை நில உடைமைதாரர்கள் உரிய ஆவணங்களுடன் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பை வெளியிட்டனர். திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். பட்டாவில் இறந்தவர்களுடைய பெயரை நீக்கி வாரிசுகள் பெயரை சேர்ப்பதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும் பட்டாவில் இருக்கும் இறந்த நில உடமைத்தாரர்களின் பெயரை நீக்கி அவர்களுடைய வாரிசுதாரர்கள் அல்லது பதிவு செய்யப்பட்ட ஆவணம் வாயிலாக உரிமை பெற்றுள்ளவர்கள் பெயரை சேர்த்துக் கொள்வதற்கு உரிய ஆவணங்களுடன் இ சேவை மையங்கள் அல்லது சிட்டிசன் போர்டல் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் இருக்கக்கூடிய கிராமப்புறம் மற்றும் நகர்புறங்களில் உள்ள நிலங்களில் நில ஆவணங்கள் கணினி மயமாக்கப்பட்டு வருகின்றது. இணைய வழியில் பொதுமக்கள் அனைவரும் இறுதியில் பார்வையிடும் வகையில் https://eservices.tn.gov.in/என்ற இணையதளத்தின் மூலம் பார்வையிட்டுக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் பல சிட்டாவில் உள்ள பட்டாதாரர்களுக்கு இறந்தவர்களின் பெயர்கள் நீக்கப்படாமல் அவர்களின் பெயர்களுக்கு பதிலாக வாரிசுதாரர்களின் பெயர்கள் சேர்க்கப்படாமலும் இருக்கின்றது.

அதனால் உடனடியாக உரிய ஆவணங்கள் கொண்டு விண்ணப்பிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர். உரிய ஆவணங்களின் அடிப்படையில் பரிசீலனை செய்யப்பட்டு பட்டாதாரர்களின் பெயர் மாற்றம் தொடர்பாக ஆவணங்களில் உரிய மாற்றங்கள் செய்து தரப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.

Previous articleபள்ளி திறந்த முதல் நாளே மாணவர்களுக்கு பறந்த அதிரடி உத்தரவு…இந்த அறிகுறி இருந்தால் பள்ளிக்கு வர வேண்டாம்!!
Next articleஉதயநிதிக்கு மருத்துவர்கள் சொன்ன அட்வைஸ்.. திடீரென அனைத்து நிகழ்ச்சிகளும் ஒத்திவைப்பு!!