அழைப்பிதழ் இருந்தால் இவையெல்லாம் வாங்கலாம்! கேரளாவில் புது அறிவிப்பு!

Photo of author

By Hasini

அழைப்பிதழ் இருந்தால் இவையெல்லாம் வாங்கலாம்! கேரளாவில் புது அறிவிப்பு!

கொரோனா இரண்டாம் அலையின் தாக்கத்தில் நாடே அல்லோல கல்லோலப் பட்டு கிடக்கிறது.இதன் பாதிப்பு பல விதங்களில் மக்களை பாதித்து வருகிறது.மாநில அரசுகள் என்ன செய்வதென்று தெரியாமல் ஒவ்வொரு வழிமுறைகளை பின்பற்றி வருகிறது.

தற்போது கேரளாவில் கொரோனா தாக்கம் படிப்படியே குறைந்து வருவதால், பாதிக்கப்படும் நபர்களை விட சிகிச்சை முடிந்து வீடு திரும்பும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

நேற்று மட்டும் 12,300 பேருக்கு தொற்று பாதித்த நிலையில் வீடு திரும்புவோர் எண்ணிக்கை 28000 ஆகும். அதே போல் நோயால் பாதிப்புக்கு ஆளாவோரின் விகிதமும் படிபடியாக குறைந்து நேற்று 13 சதவிகிதத்துக்கு வந்தது.

இந்நிலையில் நேற்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

கேரளாவில் இன்று காலை 5 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 9 மணி வரையிலும் பொது இடங்களில் நடைபயிற்சி செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.சமூக இடைவெளியை பின்பற்றியும், கொரோனா விதிமுறைகளை பின்பற்றியும் போகலாம் எனவும் கூறப்பட்டு உள்ளது.

ஸ்டேசனரி கடைகள் திறக்க அனுமதி இல்லை என்றும், திங்கள், புதன், வெள்ளி ஆகிய தினங்களில் ஜவுளி, நகைக்கடை மற்றும் செருப்பு கடைகள் 50 சதவிகித பணியாளர்களுடன் திறக்க அனுமதி அளித்துள்ளது.ஆனால் இந்த கடைகளில் திருமண அழைப்பிதழ் வைத்துள்ளவர்கள் மட்டுமே அனுமதிக்கப் படுவார்கள் எனவும், மற்றவர்கள் ஆன்லைனில் பொருட்களை வாங்கிக் கொள்ள வேண்டும் எனவும் கூறப்படுகிறது.

தளர்வுகளை தவறாக பயன்படுத்தினால் தண்டனை கிடைக்கும் எனவும் கூறப்படுகிறது.மேலும் ஜூன் 7 முதல் பொது துறை நிறுவனங்கள், கம்பெனிகள், மற்றும் மத்திய, மாநில அலுவலகங்களிலும் 50 சதவீத பணியாளர்களுடன் செயல்படலாம் எனவும், அனுமதி வழங்கி உள்ளது.

மேலும் யாருக்கும் தனி முன்னுரிமை இல்லாமல் 18 வயதை கடந்த அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும் எனவும் கூறப்படுகிறது.