UPI யூசர்களுக்கு வெளியான அதிர்ச்சி செய்தி; புதிய விதிமுறை அமல்!!

0
12
UPI payment gateway with green tick. New Delhi, India- 17th June, 2023.

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் தற்போது ஸ்மார்ட்போன் வைத்திருக்கின்றார்கள். 18 வயதிற்கும் மேற்பட்ட நபர்கள் வங்கி கணக்குடன் மொபைல் எண்ணை இணைத்துள்ள நிலையில் தற்போது யுபிஐ பரிவர்த்தனைகளை தினந்தோறும் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் புதிய வரம்புகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அதில் அவர்கள் கூறியிருப்பதாவது நாள் ஒன்றுக்கு 50 முறை மட்டுமே வங்கி கணக்கின் இருப்பு தொகை சரிபார்த்துக் கொள்ள முடியும். இந்த மாற்றங்கள் வரும் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது. யுபிஐ அடிப்படையிலான பண பரிமாற்றங்கள் நம்முடைய அன்றாட வாழ்வில் தினந்தோறும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. போன் பே, கூகுள் பே மற்றும் பேடிஎம் மூலம் நாளொன்றுக்கு பலமுறை யுபிஐ செயலி பயன்படுத்தி வருகின்றோம். யு பி ஐ நெட்வொர்க்கில் சுமையை குறைக்கும் விதமாக இந்த புதிய விதிமுறைகள் கொண்டு வரப்பட்டுள்ளது.

பயனாளர்களுக்கு எந்த விதை இடையூறும் இருக்காமல் தொடர்ச்சியான சேவைகளை வழங்க இருக்கின்றனர். ஒரு நபர் ஒன்றுக்கும் மேற்பட்ட செயலியை தினந்தோறும் பயன்படுத்துவதாக இருந்தால் ஒவ்வொரு செயலிலும் 50 முறை என மொத்தம் 100 முறை இருப்பு சரி பார்க்க முடியும். மேலும் ஒருமுறை யு பி ஐ செயலியை பயன்படுத்தினால் வங்கி கணக்கு இருப்பு பயனருக்கு தெரிவிக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. அதனால் அடிக்கடி இருப்பு தொகை சரி பார்க்க வேண்டிய அவசியம் கிடையாது.

காலை 10 மணி முதல் மதியம் ஒரு மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8:30 வரை ஏபிஐ பரிவர்த்தனைகள் செய்ய பயணங்களின் அனுமதி தேவைப்படும். அதுமட்டுமின்றி எஸ் ஐ பி பரிவர்த்தனைகள் ஓடிடி கட்டணங்கள் போன்ற தானியங்கு பண பரிமாற்றத்திற்கு இனி உச்ச நேரத்தில் அல்லாமல் பிற நேரங்களில் செயல்படுத்தப்படும். இத்தகைய புதிய மாற்றங்கள் டிஜிட்டல் பண பரிமாற்றங்களின் பாதுகாப்பை அதிகரிப்பதற்கு மட்டுமின்றி அமைப்பை நிலையாக வைத்திருக்கவும் உதவுகின்றது.

Previous articleஆதார் அட்டை இருந்தால் போதும் உடனடி கடன்; எப்படி விண்ணப்பிப்பது தெரியுமா!!
Next articleதிமுக நிர்வாகிகளுக்கு பறந்த உத்தரவு; 2026 தேர்தலில் கட்டாயம் இதை செய்ய வேண்டும்..முதலமைச்சர் ஸ்டாலின் அதிரடி!!