தம்பதிகள் ஒவ்வொருவரும் தங்கள் குழந்தையின் வருகைக்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர்.புதிதாக திருமணமான தம்பதிகளின் ஆசை சீக்கிரம் அப்பா அம்மா ஆக வேண்டும் என்பது தான்.
ஆனால் இன்று பல தம்பதிகளுக்கு இது எளிதில் நிறைவேறுவதில்லை.பல காரணங்களால் குழந்தை பிறப்பு தள்ளிப்போவதால் அவர்களுக்கு மன உளைச்சல் அதிகமாகிறது.சில தம்பதிகள் குழந்தையின்மை காரணமாக சமூகத்தில் பல கசப்பான விஷயங்களை எதிர்கொள்கின்றனர்.வயது,உடல் ஒத்துழைப்பின்மை போன்ற காரணங்கள் கருவுறுதலுக்கு தடையாக இருக்கலாம்.
ஆனால் தம்பதிகள் சரியான நேரத்தில் உடலுறவில் ஈடுபட்டால் நிச்சயம் கருத்தரிப்பிற்கு அதிக சாத்தியம் இருக்கிறது.பெண்கள் தங்கள் மாதவிடாய் கால சுழற்சியை அறிந்திருக்க வேண்டியது முக்கியம்.
சிலருக்கு 28 நாட்களுக்கு ஒருமுறை மாதவிடாய் சுழற்சி இருக்கும்.சிலருக்கு 30,32,35 என்று மாதவிடாய் சுழற்சி மாறுபடும்.அதேபோல் பெண்கள் தங்கள் அண்ட விடுப்பு நாட்களை அறிந்திருக்க வேண்டும்.
இந்த அண்ட விடுப்பானது மாதவிடாய் காலத்திற்கு 12 முதல் 16 நாட்களுக்கு முன்னதாகவே நிகழ்கின்றது.இந்த நாட்களில் தங்கள் துணையுடன் உடலுறவு வைத்துக் கொண்டால் கருத்தரிக்க அதிக வாய்ப்பிருக்கிறது.
அதேபோல் ஓவிலேஷன் வெளியாகும் நாட்களை அறிந்து அந்நாட்களில் உடலுறவு வைத்துக் கொண்டால் கருத்தரிக்க அதிக வாய்ப்பிருக்கிறது.இதுபோன்ற முயற்சிகளை தொடர்ந்து 6 மாதம் முதல் ஒரு வருடம் வரை மேற்கொள்ள வேண்டும்.இந்த டிப்ஸ்களை பின்பற்றியும் பலனளிக்கவில்லை என்றால் நீங்கள் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்றுக் கொள்வது நல்லது.