ஒரு பிரசவத்தில் 1 அல்லது 2 என்றால் நம்பலாம் ஆனால் இத்தனையா? உலக சாதனை படைத்த பெண்!
தற்போதுள்ள சூழ்நிலையில் நாமெல்லாம் 2 குழந்தைகளை வைத்தே பார்த்துக்கொள்ள சிரமமாக உள்ள நிலையில் நினைத்து பாருங்கள் 10 குழந்தைகள். அது கடவுள் செயல் என்றாலும் பார்த்துக்கொள்ள தனி தேம்பே வேண்டும் அல்லவா? இருந்தாலும் இந்த விசயத்தில் கூட உலக சாதனை படைக்க முடியும் என நிரூபித்து உள்ளார்.
16 ம் பெற்று பெரு வாழ்வு வாழ்க என பெரியோர் சொன்னதை போல ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகளை பெற்றுள்ளார் என நினைத்துக் கொள்வோம்.
37 வயதான கோசியமே என்ற பெண் ஒருவர், தென் ஆப்ரிக்காவின் பிரிட்டோரியா என்ற பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு பிரசவத்திற்காக சென்றுள்ளார். அப்போது அந்த பெண்ணிற்கு அறுவை சிகிச்சை மூலம் குழந்தைகளை வெளியே எடுக்க மருத்துவர்கள் முடிவு செய்துள்ளனர்.
அதன் படி, கர்ப்பத்தின் 29ம் வாரத்தில் அறுவை சிகிச்சை மூலம் 7 ஆண் பிள்ளைகளையும் 3 பெண் பிள்ளைகளையும் தமது மனைவி பெற்றெடுத்துள்ளார் என அவரது கணவர் டேப்ஹோ தெரிவித்துள்ளார்.
இதை குறித்து பேசிய அந்த பெண்ணின் கணவர் டேப்ஹோ, “எனது மனைவி ஏழு மாதங்கள் மற்றும் ஏழு நாட்கள் கர்ப்பமாக இருந்தார். தற்போது நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன், என்னால் இப்போது அதிகம் பேச முடியாது” என அவர் ஆனந்த கண்ணீர் வடித்துள்ளார்.
ஏற்கனவே 6 வயதில் இரட்டையர்களுக்கு தாயாரான கோசியமே, தமக்கு ஏற்பட்டது இயற்கையான கர்ப்பம் இது எனவும், கருவுறுதல் சிகிச்சை எதுவும் எடுத்துக் கொள்ளவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
வழக்கமான மருத்துவ சோதனையின் போது ஒருமுறை தாம் 6 குழந்தைகளுக்கு தாயாக இருப்பதாக மருத்துவர்கள் கூறினார்கள் எனவும், அதன் பின்னர் நடந்த சோதனையில் அது 8 குழந்தைகளாக இருக்க வாய்ப்புள்ளது எனவும் தெரிவித்ததாக அவர் கூறியுள்ளார்.
மருத்துவர்களின் பேச்சை நம்ப முடியாமல் இருந்ததாகவும் ஆனால் மிகுந்த மகிழ்ச்சி ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தொடக்கத்தில் தமக்கு அதிர்ச்சியாக இருந்தது என்றாலும், தற்போது மிகுந்த மகிழ்ச்சி என அவரது கணவன் குறிப்பிட்டுள்ளார்.
சில நாட்களுக்கு முன்பு ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகளை பெற்றெடுத்த தாய் உலக சாதனை படைத்துள்ளதாக கருதப்பட்ட நிலையில் தற்போது இவர் 10 பிள்ளைகளை பெற்றெடுத்து உலக சாதனை படைத்துள்ளார்.