இனி ரேஷன் கடைக்கு செல்ல தேவையில்லை.. இனி மொபைல் மூலமே அனைத்தையும் வாங்கலாம்!!

Photo of author

By Jeevitha

இனி ரேஷன் கடைக்கு செல்ல தேவையில்லை.. இனி மொபைல் மூலமே அனைத்தையும் வாங்கலாம்!!

Jeevitha

Updated on:

It will be available this month too.. immediately go to the ration shop!! New Announcement!!

ரேஷன் கடைகளின் வேலை நேரம், பொருட்களின் இருப்பு, குடும்ப அட்டைதாரர்களின் விவரங்கள், பரிவர்த்தனைகள், பின்னூட்டம் ஆகியவற்றை எந்நேரத்திலும் கண்டறிய உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஒரு புதிய அலைபேசி செயலியை உருவாக்கியுள்ளது. TNePDS என்ற இந்த புதிய செயலியை ரேஷன் கார்டு வைத்திருக்கும் அனைவரும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மக்கள் தாங்கள் வைத்திருக்கும் ரேஷன் கார்டில் தங்களது விலாசங்களை இனி ஆன்லைன் வழியாகவே மாற்றிக்கொள்ள முடியும். முதலில் உங்கள் ரேஷன் கார்டில் உங்கள் தொலைபேசி எண் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டும். அவ்வாறு இணைக்கப்படாமல் இருந்தால் TNEPDS என்ற உதவி மையத்தைத் தொடர்பு கொண்டு பயன் பெறலாம்.

மேலும் ரேஷன் கார்டில் விலாசங்களை சரி செய்ய சில நாள்கள் எடுத்துக்கொள்ளும். இனி தங்கள் முகவரியை  தமிழ்நாடு மின்-பொது விநியோக அமைப்பு போர்ட்டல் மூலம் குறிப்பிட்ட ஆவணங்களைக்கொண்டு  பதிவிடலாம்.

மின்னணு அட்டை தொடர்பான சேவைகளை https://www.tnpds.gov.in/ என்ற இணையதள முகவரில் உள்நுழைந்து இணையப்பக்கத்தின் வலது புறத்தில் கண்டறிந்து  ரேஷன் அட்டைதாரரின் அனைத்து விவரங்களையும் சரியாக உள்ளீடு செய்ய வேண்டும்.

மேலும் ஆன்லைன் வழியாக தங்களது முகவரியை 1967-425-5901 அல்லது 1800-425-5901 என்ற எண்ணிற்கு அழைத்து ரேஷன் கார்டில் உங்கள் முகவரியைப் பற்றி அதிகாரிகளிடமிருந்து அறிந்து கொள்ள வேண்டும்.

தமிழ்நாடு அரசால் உருவாக்கப்பட்ட (Public Distribution System)
உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில்   1967 (அ) 1800-425-5901 என்ற இலவச உதிவிமைய எண்ணும் கொடுக்கப்பட்டுள்ளது.