இனி மருத்துவர்களின் பரிந்துரை இல்லாமலேயே கொரோனா பரிசோதனை செய்து கொள்ளலாம்!
கொரோனா பொது முடக்கத்தில்,மக்களின் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு மத்திய மாநில அரசுகளால் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது.தற்போது வரை இந்தியாவில் 49 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே தற்போது படிப்படியாக ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றது.இந்நிலையில், மக்கள் வழிகாட்டு நெறிமுறைகளை சரியாக பின்பற்றாமல் அலட்சியமாக இருப்பதினால் மேலும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே ஓர் இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்பவர்கள் மருத்துவர்களின் பரிந்துரையின்படி கொரோனா சோதனை செய்துகொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது மருத்துவர்களின் பரிந்துரை இல்லாமலேயே கொரோனா சோதனை செய்து கொள்ளலாம் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.இதன் மூலம் விருப்பம் உள்ளவர்கள் அல்லது ஏதேனும் தொலைத்தூர பயணம் மேற்கொள்பவர்கள் தேவைப்பட்டால் பரிசோதனையை செய்துகொண்டு, சான்றிதழை வைத்துக் கொள்ளலாம் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.