பிரபல நாட்டில் இனி இது இருந்தால் தான் வெளியே செல்லவே முடியும்! அனைவருக்கும் கட்டாயம்!

Photo of author

By Hasini

பிரபல நாட்டில் இனி இது இருந்தால் தான் வெளியே செல்லவே முடியும்! அனைவருக்கும் கட்டாயம்!

கடந்த ஆண்டு முதலே கொரோனா தாக்கம் உலக அளவில் பல பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றது. ஒவ்வொரு நாடும் கொரோனாவைப் பார்த்து அலறி அடித்து வருகின்றனர். நாட்டு மக்களை இதில் இருந்து காக்க என்ன செய்யலாம் என்று ஒவ்வொரு அரசும் போட்டிப்போட்டுக்கொண்டு ஆலோசனை நடத்தி வருகின்றன. மத்திய மாநில அரசுகள் இணைந்து தடுப்பூசிகளை பரிசீலனை செய்து வருகின்றனர். இருந்தாலும் இது ஒரு தீர்வு ஆகாது என்றும் மருத்துவ அறிஞர்கள் கூறுகின்றனர்.

இந்நிலையில் மரபணுமாற்றம் செய்யப்பட்ட வைரசினால் மீண்டும் மீண்டும் இதன் அலைகள் ஏற்படலாம் என்றும் அறிவியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். தற்போது இந்தியாவில் இரண்டாவது அலை சற்று முடிவடைந்த நிலையில், பல நாடுகளில் இன்னும் இதன் தொற்று அதிகரித்த வண்ணமே உள்ளது. குறைவது போல் இருக்கிறது. குறைகிறது என்று மகிழும் நேரத்தில், ஒரே நேரத்தில் அதிகரித்து விடுகிறது. கோரோனாவிற்க்கு எப்படிதான் தீர்வு காண்பது என உலகமே குழப்பத்தில் உள்ளது.

தற்போது சீனாவிலும் கூட அடுத்த அலை பரவி வருவதால் உலகமே கலக்கம் அடைந்துள்ளது. கொரோனா சீனாவின் மூலம்தான் பரவியது என்றாலும், சீனாவில் அவ்வளவாக பாதிப்பு ஏற்படுத்தாத கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளிடையே மீண்டும் பரவத் தொடங்க ஆரம்பித்துள்ளது. நியூயார்க், பிரான்ஸ், சீனா,  அமெரிக்கா போன்ற பல நாடுகளில் கொரோனா தனது இரண்டாவது இன்னிங்சை அல்லது மூன்றாவது இன்னிங்ஸை ஆரம்பித்து உள்ளது.

அதனை தடுக்க தடுப்பூசி போட்டுக் கொண்டாலும், இரண்டு டோஸ்கள் போட்டு முடித்து விட்டாலும் கூட, அமெரிக்காவின் செனட் சபை உறுப்பினருக்கு கூட மீண்டும் கோரனா தொற்று பரவியுள்ளது. இது மக்களிடையே மிகுந்த கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதனை தொடர்ந்து நியூயார்க் நகரில் தற்போது Key to NYC என்ற பெயரிலான இந்த தடுப்பூசி பாஸ்  முறை 16ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இதை நியூயார்க் நகர மேயர் பில் டி பிளாசியோ அறிவித்துள்ளார்.

அந்த அறிவிப்பின்படி உணவகங்கள், உடற்பயிற்சிக் கூடங்கள் உள்ளிட்ட பல்வேறு பொது இடங்களுக்கு வரும் பொதுமக்கள் தாங்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டு, அதற்கான ஆதாரத்தை காண்பிப்பது, கட்டாயம் என்றும் தெரிவித்துள்ளார். இதுவே தடுப்பு ஊசி பாஸ் என்றும் அழைக்கப் படுவதாக மேயர் தெரிவித்தார். குறைந்தபட்சம் ஒவ்வொருவரும் ஒரு டோஸ் கொரோனா வைரஸ் தடுப்பூசி பாஸ் என்பது வைத்திருக்க வேண்டுமென்றும் கட்டளையிட்டுள்ளார்.