Breaking News

எங்கள ஏமாத்திட்டீங்க.. டென்ஷன் ஆன திமுக கூட்டணி கட்சி.. தள்ளாடும் ஸ்டாலின்..

You have deceived us.. The DMK alliance is tense.. Stalin is faltering..

DMK COMMUNIST: அடுத்த 3 மாதங்களில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கிறது. இதற்கான தேர்தல் பணிகளும், கூட்டணி வியூகங்களும், தொகுதி பங்கீடு குறித்த பேச்சு வார்த்தையும் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் தமிழகத்தில் ஆளுங்கட்சியாக உள்ள திமுக 2026 தேர்தலிலும் வெற்றி பெற பல்வேறு வேலைகளை செய்து வருகிறது. அதற்காக கூட்டணி கட்சிகளிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபடுவது, மக்கள் மத்தியில் நல்ல திட்டங்களை செயல்படுத்துவது, சென்ற முறை தோல்வியுற்ற தொகுதியில் இம்முறை வெற்றி பெற அந்த தொகுதியில் முக்கிய அமைச்சர்களை நியமிப்பது போன்ற முயற்சிகளை திமுக செய்து வருகிறது.

இவ்வாறான நிலையில் திமுகவின் கூட்டணி கட்சிகள் தேர்தல் நெருங்கும் சமயத்தில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வருவது மட்டுமல்லாமல் திமுகவிற்கு எதிராக சில கருத்துக்களையும் கூறி வருகிறது. அந்த வகையில் திமுகவுடன் கூட்டணியில் தொடர்ந்து வரும் கம்யூனிஸ்ட் கட்சி, திமுக அரசின் நிறைவேற்றாத வாக்குறுதிகளை பற்றி பொதுவெளியில் பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பென்னாகரம் மற்றும் அரூர் பகுதியில் மாநாடு நடத்தபட்ட போது, திமுக அரசின் நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள் பற்றி விவாதிக்கபட்டுள்ளது.

மேலும் கூட்டணி கட்சியாகவே இருந்தாலும், எங்கள் கட்சி எப்போதும் மக்கள் நலன் சார்ந்தே செயல்படும் என்று கூறினார்கள். திமுகவின் கூட்டணி கட்சியே இவ்வாறான செய்தியை கூறியிருப்பது திமுக தலைமைக்கு அதிருப்தியைஏற்படுத்தி இருக்கிறது.. காங்கிரஸ் மற்றும் விசிக விஜய் கூட்டணியில் இணைவது போன்ற போக்கை காட்டி வரும் சூழலில் கம்யூனிஸ்ட் கட்சியின் இந்த செயலும் திமுகவிற்கு எதிராகவே பார்க்கப்படுகிறது. இதனால்  தேர்தல் நெருங்கும் சமயத்தில் திமுகவின் நிலைமை கேள்விக்குறியாகும் என்று அரசியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.