DMK VCK: சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில் அதிமுக, திமுக, பாமக, போன்ற கட்சிகளில் உட்கட்சி பிரச்சனை தலைவிரித்தாடுகிறது. அதிமுகவில் பல்வேறு அணிகள் உருவானது, பாமகவில் ஏற்பட்ட தந்தை மகன் பிரச்சனை, திமுகவின் கூட்டணி கட்சிகளின் கோரிக்கை போன்றவை புதிய வேகமேடுத்துள்ளது என்றே சொல்லலாம். அதிலும் முக்கியமாக ஆளுங்கட்சியாக இருக்கும் திமுக இந்த முறையும் வெற்றி பெற வேண்டுமென்று பல்வேறு வியூகங்களை கையில் எடுத்து வரும் சமயத்தில், அதன் கூட்டணி கட்சிகள் அதற்கு முட்டுக்கட்டை போட்டு வருகின்றன.
காங்கிரஸ் கட்சி ஆட்சியில் பங்கை கேட்டு வலியுறுத்தி வரும் சமயத்தில், விசிக அதிக தொகுதிகளை கேட்டு வருகிறது. திமுகவின் கூட்டணி கட்சிகளில் முதலிடம் பிடித்திருப்பது விசிக தான் அப்படி இருக்க விசிகவுக்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்குவது எந்த வகையில், நியாயம் என்று விசிகவை சேர்ந்தவர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர். குறைந்த தொகுதிகளை ஒதுக்குவதால் ஸ்டாலின் மீது அதிருப்தியில் இருந்த திருமா வேறு கட்சியில் இணைய போகிறார் என்ற தகவலும் பரவியது. இந்நிலையில் அதனை உறுதிப்படுத்தும் விதமாக திருமாவளவன் திமுகவிற்கு எதிராக ஒரு கருத்தை கூறியுள்ளார்.
அண்ணாமலை பல்கலைகழகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களின் கோரிக்கைகளை பரிசீலித்து அதனை நிறைவேற்றி தரவேண்டுமென விசிகவின் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். பொதுவாக இப்படிப்பட்ட விஷயங்களில் ஆளுங்கட்சிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் இந்த மாதிரியான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டுமென கூறுவது வழக்கம். ஆனால் ஆளுங்கட்சியின் கூட்டணியில் இருக்கும் கட்சியே இந்த முழக்கத்தை முன் வைப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது என்று பலரும் கூறுகின்றனர். இதன் காரணமாக திமுகவை எதிர்க்க விசிக தயாராகி விட்டது என்ற கருத்தும் வலுபெற்று வருகிறது.

