ரயிலில் பயணித்தபோது விபரீதம்! இளம் நடிகை பரிதாப பலி!

Photo of author

By Sakthi

தெலுங்கு திரையுலகில் இளம் நடிகையாக வலம் வந்தவர் ஜோதி ரெட்டி ஆந்திர மாநிலத்தைச் சார்ந்த இதர ஐதராபாத்தில் இருக்கின்ற வங்கி ஒன்றில் வேலை பார்த்து வந்தார் சினிமாவிலும் குணச்சித்திர வேடங்களில் நடித்து ரசிகர்களை மெதுவாக பெற்றிருக்கிறார். தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுவது போல ஆந்திர மாநிலத்தில் சங்கரந்தி பண்டிகை ஜனவரி மாதத்தில் கொண்டாடப்படுவது வழக்கமான ஒன்று.

அந்த விதத்தில், நடிகை ஜோதி ரெட்டி சொந்த கிராமத்தில் இந்த பண்டிகையை கொண்டாடி விட்டு ஐதராபாத்திற்கு சென்று இருக்கிறார். கடப்பாவில் இருந்து ரயில் மூலமாக ஹைதராபாத்தில் இருக்கின்ற கச்சிகுடாவிற்கு செல்லும் வழியில் அவர் அசந்து தூங்கி இருக்கிறார். தூக்க கலக்கத்தில் கச்சிகுடா ரயில் நிலையத்திற்கு பதிலாக ஷாட் நகர் ரயில் நிலையத்தில் இறங்கி விட்டார் ஜோதி ரெட்டி.

தொடர்வண்டி நிலையத்திலிருந்து ஊர் பெயர் பலகையை பார்த்ததும் தவறான தொடர்வண்டி நிலையத்தில் இறங்கி விட்டதை உணர்ந்து கொண்ட அவர் மீண்டும் தொடர் வண்டியில் ஏற முயற்சி செய்திருக்கிறார். தொடர் வண்டி கிளம்பிய நிலையில், ஓடி சென்று அவரை ஏற முயற்சி செய்தபோது தவறி பிளாட்பாரத்திற்கும், ரயிலுக்கும், இடையில் சிக்கி பலத்த காயமடைந்தார்.

இதனை தொடர்ந்து அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார் 26 வயதே ஆன ஜோதி ரெட்டிக்கு இன்னும் திருமணம் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தூக்கத்தால் நிகழ்ந்த இந்த சோக சம்பவம் தெலுங்கு திரையுலகினர் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அவருடைய மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.