தேர்வு எழுதிவிட்டு சாலையைக் கடக்க முயற்சி செய்த இளம்பெண் விபத்தில் பரிதாப பலி! திருச்சி அருகே சோகம்!

Photo of author

By Sakthi

தேர்வு எழுதிவிட்டு சாலையைக் கடக்க முயற்சி செய்த இளம்பெண் விபத்தில் பரிதாப பலி! திருச்சி அருகே சோகம்!

Sakthi

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தாலுகா அரவக்குறிச்சி பகுதியில் வசித்து வருபவர் அலெக்ஸ்பாண்டியன் இவருடைய மனைவி லோகநாயகி இவர் டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு விண்ணப்பம் செய்தார்.

இதற்காக அவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அவருடைய பெற்றோர் ஊரான திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே கருப்பூர் என்ற கிராமத்திற்கு தன்னுடைய கணவர் மற்றும் 2 குழந்தைகளுடன் சென்றிருக்கிறார்.

இந்த நிலையில், கடந்த 26ஆம் தேதி மஞ்சம்பட்டி புனித அந்தோணியார் மேல்நிலைப் பள்ளியில் டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு எழுதினார் என சொல்லப்படுகிறது.

தேர்வு முடிந்த பிறகு பேருந்து ஏறுவதற்காக சாலையை கடந்து சமயத்தில் மின்னல் வேகத்தில் வந்த கார் அவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது.

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்திலிருந்த பொதுமக்கள் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார்கள்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இவர் நாம் தமிழர் கட்சியின் சார்பாக ஒன்றிய கவுன்சிலர் வேட்பாளராக போட்டியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.