லிப்ட் கேட்ட வாலிபர்! உதவிய நபருக்கு கூகிள் பே மூலம் நடந்த விபரீதம்!

Photo of author

By Hasini

லிப்ட் கேட்ட வாலிபர்! உதவிய நபருக்கு கூகிள் பே மூலம் நடந்த விபரீதம்!

குன்றத்தூரை சேர்ந்தவர் அஜித்குமார். இவர் ஆவடியை அடுத்த சோலைசேரி பகுதியில் இருந்து ஆவடி நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது மர்ம நபர் ஒருவர் வழிமறித்து அவரிடம் உதவிக்காக லிப்ட் கேட்டுள்ளார். அப்போது வண்டியை நிறுத்தி உள்ளார். அப்போது அவர் அருகே வந்த மேலும் இரண்டு வாலிபர்கள் அவரை சரமாரியாக தாக்கினர்.

மேலும் அவர் அணிந்திருந்த ஒரு பவுன் மோதிரம் மற்றும் தங்க சங்கிலியை பறித்து விட்டனர். அதைத் தொடர்ந்து அவரது கைபேசியையும், அவரிடம் இருந்து கைப்பற்றி அவரது வங்கி கணக்கில் இருந்து google.pay மூலம் 13 ஆயிரத்தை தங்களது வங்கி கணக்கிற்கு மாற்றி உள்ளனர். அதன் பின்னால் அவரை அங்கேயே முட்புதரில் தள்ளிவிட்டு செல்போன் மற்றும் மோட்டார் சைக்கிளையும் பறித்துக்கொண்டு அங்கிருந்து மர்ம நபர்கள் தப்பி ஓடிவிட்டனர்.

இதுகுறித்து அஜித்குமார் ஆவடி போலீஸ் நிலையத்தில் தற்போது புகார் அளித்துள்ளார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொள்ளையர்கள் பணத்தை அனுப்பிய வங்கி கணக்கு விவரத்தை வைத்து விசாரணைகள் தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.