ADMK DMK: சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சமயத்தில் தேர்தல் களம் வேகமெடுக்க தொடங்கியுள்ளது. திமுக தொடர்ந்து 7 வது முறையும் ஆட்சியை பிடித்து விட வேண்டுமென தீவிரமாக முயற்சி செய்து வருகிறது. அதிமுகவிற்கும் இது முக்கியமான தேர்தல் என்பதால் மற்ற கட்சிகளை விட அசுர வேகத்தை எடுத்துள்ளது. அதில் ஒரு பகுதியாக மக்களை சந்திக்கும் பணியும், தேசிய கட்சியான பாஜக உடனும் கூட்டணி அமைத்து விட்டது. இந்நிலையில் அதிமுகவில் இபிஎஸ்யின் தலைமையின் மேல் நம்பிக்கை இல்லாதவர்களும், பாஜக கூட்டணியை விரும்பாத முக்கிய நிர்வாகிகளும் திமுக பக்கம் சென்றுள்ளனர்.
இதனால் அதிமுக பலவீனமடைந்து காணப்படுவதால், அதனை பழைய நிலைக்கு கொண்டு வர இபிஎஸ் பல்வேறு முயற்சிகளை கையில் எடுத்து வருகிறார். ஆனால் அதனை கெடுக்கும் வகையில், அதிமுகவின் இரண்டாம் கட்ட தலைவர்கள் சில வேலைகளை செய்து வருகின்றனர். திமுக அரசு பெண்களுக்கு இலவசமாக வழங்கும் சலுகைகளுடன் பெண்களை ஒப்பிட்டு பேசிய அதிமுக அமைச்சர் சிவி சண்முகத்திற்கு எதிராக அதிமுகவில் கழக குரல் எழுந்த நிலையில், தற்போது புதிதாக, திமுகவிற்கு சாதகமாக அதிமுக அமைச்சர், கே.டி. ராஜேந்திர பாலாஜி, ஒரு கருத்தினை கூறியுள்ளார்.
பீகார் தேர்தலில் காங்கிரஸ் யாரும் எதிர்பார்த்திராத அளவு தோல்வியை தழுவியதை விமர்சித்து பேசிய ராஜேந்திர பாலாஜி, நாட்டை பற்றி கவலை படாத காங்கிரசை திமுக தான் தூக்கி புடிச்சிக்கிட்டு இருக்கு. தொப்புன்னு போட்ருக்காங்க அந்த கட்சியால எந்திரிக்கவே முடியாது என்று கூறியுள்ளார். இவரின் இந்த கருத்து திமுக கூட்டணியில் காங்கிரஸ் தொடர்ந்தால் திமுகவால் இந்த தேர்தலில் வெற்றி பெற முடியாது, அதனால் காங்கிரஸ் கூட்டணியை கலைச்சிடுங்க என்று கூறியுள்ளது போல தெரிகிறது என அரசியல் ஆர்வலர்கள் கூறி வருகின்றனர். இதனால் இவரின் இந்த கூற்றுக்கு அதிமுகவை சேர்ந்தவர்கள் பலரும் கடுமையான கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

