காதல் என்ற பெயரில் படுக்கை அறை வரைச்சென்ற காதலர்கள்:! 16 வயது காதலி 4 மாத கர்ப்பம்! காதலன் போக்சோ சட்டத்தில் உள்ளே!

Photo of author

By Pavithra

காதல் என்ற பெயரில் படுக்கை அறை வரைச்சென்ற காதலர்கள்:! 16 வயது காதலி 4 மாத கர்ப்பம்! காதலன் போக்சோ சட்டத்தில் உள்ளே!

சென்னை கொருக்குப்பேட்டை புத்தா செட்டித் தெருவை சேர்ந்தவர் மாசிலாமணி என்பவருடைய மகன் சூர்யா இவர் அப்பகுதியில் கூலி வேலை செய்து வருகின்றார்.சென்னை கொருக்குப்பேட்டை மீனாம்பாள் நகர் 5வது தெரு சேர்ந்தவர் 16 வயது சிறுமி.இந்த சிறுமியின் பாட்டி வீடு கொருக்குப்பேட்டை ராமநாதபுரத்தில் உள்ளது.இந்தச் சிறுமி தனது பாட்டி வீட்டிற்கு அடிக்கடி வருவது வழக்கமாக இருந்திருக்கிறது.

பாட்டி வீட்டிற்கு வரும் சிறுமிக்கும்,சூர்யாவிற்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை காட்டி அந்தப் பெண்ணை பாலியல் தொல்லை செய்ததாக கூறப்படுகிறது.இவர்கள் அடிக்கடி தனிமையில் இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சிறுமியின் தாயாருக்கு சிறுமி 4 மாத கர்ப்பிணியாக இருப்பது தெரியவந்த நிலையில் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாயார்,வண்ணாரப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.சிறுமியின் தாயார் அளித்த புகாரின் பேரில் வண்ணார்பேட்டை மகளிர் காவல் துறையினர் சூர்யாவை அழைத்து விசாரணை நடத்தினர்.விசாரணையில் சூரியா சிறுமியுடன் தனிமையில் இருந்தது ஒப்புக்கொண்டார்.இதனைத் தொடர்ந்து சூர்யாவை வண்ணாரப்பேட்டை அனைத்து மகளிர் காவல் துறையினர்,போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

இதுபோன்ற தவறுகள் ஆண்கள் மீது மட்டும் இல்லை,பெண்கள் மீதும் இருக்கின்றது என்பதனை புரிந்து கொள்ள வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.