டிராகன் பட ஸ்டைலில் மோசடி செய்த வாலிபர்!. ஆனா கொஞ்ச நாளிலேயே சிக்கிட்டாரு!…

Photo of author

By அசோக்

டிராகன் பட ஸ்டைலில் மோசடி செய்த வாலிபர்!. ஆனா கொஞ்ச நாளிலேயே சிக்கிட்டாரு!…

அசோக்

dragon

சாஃப்ட்வேர் துறையில் வேலைக்கு இன்ஜினியரிங் படித்த பட்டதாரிகள் எடுக்கப்படுகிறார்கள். பெரும்பாலும் இப்போதெல்லாம் நேர்காணலுக்கு நேரில் வரசொல்லாமல் ஜூம் மீட்டிங் உள்ளிட்ட சில ஆன் லைன் ஆப் மூலம் வீடியோ மூலமாக நேர்காணலை நடத்துகிறார்கள். அதில் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் பணியில் அமர்த்தப்படுகிறார்கள். ஆனால், அதிலும் மோசடி செய்ய முடியும் என்பதை டிராகன் படத்தில் காட்டியிருந்தார்கள்.

டிராகன் படத்தில் பிரதீப் ரங்கநாதனை கவுதம் மேனன் வீடியோ காலில் இண்டர்வியூ நடத்துவார். அப்போது பிரதீப்புக்கு பதிலாக அங்கே வேறு ஒருவர் ஆங்கிலத்தில் பதிலளிப்பார். அவர் பேசுவதற்கு ஏற்ப பிரதீப் வாயை மட்டும் அசைப்பார். வீடியோ காலில் எதிரே இருந்து பார்ப்பவருக்கு பிரதீப் பேசுவது போலவே தெரியும். அப்படி மோசடி செய்து ஒரு லட்ச ரூபாய் வேலையில் சேர்வார் பிரதீப்.

தற்போது இது போல நிஜ சம்பவம் நடந்துள்ளது. தெலுங்கானா மாநிலத்தில் உள்ள இன்போசில் நிறுவனத்தில் ராபா சர்ய் பிரசாந்த் என்பவர் போலி சான்றிதழ்கள் கொடுத்து வேலைக்கு சேர்ந்திருக்கிறார். ஆன்லைனில் நேர்காணல் நடந்த போது சரளமாக ஆங்கிலம் பேசிய சாய் வேலைக்கு சேர்ந்த பின் தடுமாறியதால் அவர் மீது சந்தேகம் வந்திருக்கிறது. அதன்பின் நடத்திய விசாரணையில் நேர்காணலில் அவருக்கு பதில் வேறொருவர் பேசியது தெரியவந்திருக்கிறது. தற்போது இவரின் மீது இரண்டு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

வேலைக்கு சேர்ந்த 15 நாட்களில் அவர் செய்த மோசடி தெரியவந்திருக்கிறது. பிரதீப் ரங்கநாதன் படங்கள் தெலுங்கிலும் ஹிட் அடிப்பதால் டிராகன் படமும் தெலுங்கு மொழியில் டப் செய்யப்பட்டு வெளியானது குறிப்பிடத்தக்கது.